/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ சாலையோரம் சாய்ந்த மூங்கில்கள் அகற்றம் சாலையோரம் சாய்ந்த மூங்கில்கள் அகற்றம்
சாலையோரம் சாய்ந்த மூங்கில்கள் அகற்றம்
சாலையோரம் சாய்ந்த மூங்கில்கள் அகற்றம்
சாலையோரம் சாய்ந்த மூங்கில்கள் அகற்றம்
ADDED : ஜூலை 14, 2024 11:43 PM

கூடலுார்;கூடலுார் தொரப்பள்ளி அருகே, மைசூரு சாலையில் சாய்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த காய்ந்த மூங்கில்கள் அகற்றப்பட்டன.
கூடலுார் தொரப்பள்ளி அருகே, மைசூரு தேசிய நெடுஞ்சாலை சாலையோர மூங்கில்கள் நேற்று காலை சாலையில் சாய்ந்தன. இதனால், வாகன போக்குவரத்துக்கு இடையூறாக ஏற்பட்டது..
தகவல் அறிந்த தேசிய நெடுஞ்சாலை துறையினர், பொக்லின் உதவியுடன் மூங்கில்களை அகற்றி, போக்குவரத்தை சீரமைத்தனர்.