/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மழையால் பாதிக்கப்பட்ட பழங்குடியினருக்கு நிவாரண உதவி மழையால் பாதிக்கப்பட்ட பழங்குடியினருக்கு நிவாரண உதவி
மழையால் பாதிக்கப்பட்ட பழங்குடியினருக்கு நிவாரண உதவி
மழையால் பாதிக்கப்பட்ட பழங்குடியினருக்கு நிவாரண உதவி
மழையால் பாதிக்கப்பட்ட பழங்குடியினருக்கு நிவாரண உதவி
ADDED : ஜூலை 27, 2024 01:13 AM
கூடலுார்;கூடலுார், அத்திப்பாளி, புத்துார்வயல் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பழங்குடியினருக்கு, ரோட்டரி கிளப் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.
கூடலுார் பகுதியில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட அத்தியாளி பாடி, புத்துார் வயல், சுல்லிகுன்னு, கரளிபட்டிபாடி பகுதியை சேர்ந்த, 100 பழங்குடி மக்களுக்கு ரோட்டரி கூடலுார் புளூ மவுண்டன், ரோட்டரி கவுந்தப்பாடி, ரோட்டரி நம்பியூர் உழவன் சங்கம் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. செயலாளர் ராபர்ட் அலெக்சாண்டர் வரவேற்றார்.
நிகழ்ச்சிக்கு தலைவர் யாஷின் ஷெரிப் தலைமை வகித்தார். அதில், 100 குடும்பங்களுக்கு தலா, 100 கிலோ அரிசி உள்ளிட்ட, 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கினர். சங்க நிர்வாகிகள் வர்கிஸ், எல்ஜோதாமஸ், அஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.