/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மண்சரிவில் வீடுகள் சேதம் ஆய்வுக்கு பின் நிவாரணம் மண்சரிவில் வீடுகள் சேதம் ஆய்வுக்கு பின் நிவாரணம்
மண்சரிவில் வீடுகள் சேதம் ஆய்வுக்கு பின் நிவாரணம்
மண்சரிவில் வீடுகள் சேதம் ஆய்வுக்கு பின் நிவாரணம்
மண்சரிவில் வீடுகள் சேதம் ஆய்வுக்கு பின் நிவாரணம்
ADDED : ஜூலை 22, 2024 02:07 AM
ஊட்டி:ஊட்டி முள்ளிகூர் ஊராட்சிக்கு உட்பட்ட குட்டிமணி நகர், நஞ்சநாடு ஊராட்சிக்கு உட்பட்ட போர்த்திஹாடா மற்றும் மெட்ரோரை பகுதிகளில் தென்மேற்கு பருவமழையின் போது மண்சரிவு ஏற்பட்டு வீடுகள் சேதம் அடைந்தன.
இந்தப் பகுதிகளை ஆய்வு செய்த சுற்றுலாத்துறை அமைச்சர் கூறியதாவது:
மாவட்ட நிர்வாகம், தென்மேற்கு பருவ மழை முன்னேற்பாடுகளை சிறப்பாக செய்து வருகிறது. மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக, தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து, பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
அதில், போர்த்திஹாடா பகுதியில் சேதமடைந்த வீட்டின் உரிமையாளருக்கு, 8,000 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், எனது சொந்த நிதியில், மூன்று நபர்களுக்கு, தலா, 4,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இப்பகுதியில் தேவையான இடங்களில் தடுப்பு சுவர் அமைக்க, துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில், மூன்று வீடுகள் முழுமையாகவும், 51 வீடுகள் பகுதி சேதம் அடைந்துள்ளன.
தென்மேற்கு பருவமழையில், இதுவரை சேதம் அடைந்த, 54 வீடுகளுக்கு இழுப்பீட்டு தொகையாக, தலா 8,000 வீதம், 4.32 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது. மழையில், 19 இடங்களில் மண்சரிவும், 52 மரங்களும் விழுந்துள்ளன. போர்க்கால அடிப்படையில், சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.
மூன்று மாநில பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது. இத்தலார் பகுதியில் தடுப்பு சுவர் இடிந்த பகுதியை ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வருவாய்த் துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், கூடுதல் கலெக்டர் கவுசிக், ஊட்டி ஆர்.டி.ஓ., மகராஜ் உட்பட, அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.