/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மழை குறைந்து பலத்த காற்று கேத்தியில் மரம் விழுந்து பாதிப்பு மழை குறைந்து பலத்த காற்று கேத்தியில் மரம் விழுந்து பாதிப்பு
மழை குறைந்து பலத்த காற்று கேத்தியில் மரம் விழுந்து பாதிப்பு
மழை குறைந்து பலத்த காற்று கேத்தியில் மரம் விழுந்து பாதிப்பு
மழை குறைந்து பலத்த காற்று கேத்தியில் மரம் விழுந்து பாதிப்பு
ADDED : ஜூலை 20, 2024 12:46 AM
குன்னுார்:குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழையின் தாக்கம் குறைவாக இருந்தபோதும் பலத்த காற்று வீசி வருகிறது.
இந்நிலையில், நேற்று காலை கேத்தி சாலையில் போலீஸ் ஸ்டேஷன் அருகே உயரமான கற்பூர மரம் விழுந்தது.
இதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தார் ஊற்றும் இயந்திரம் கொண்ட லாரி சேதமடைந்தது.
தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் தலைமையில் தீயணைப்பு துறையினர் அங்கு சென்று மரத்தை வெட்டி அகற்றினர். ஒரு மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது.