/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல் பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்
பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்
பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்
பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்
ADDED : ஜூன் 12, 2024 12:48 AM
ஊட்டி;நீலகிரியில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பள்ளி இறுதி தேர்வுகள் முடிந்து கடந்த ஏப்., 25 ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. நேற்று முன்தினம் பள்ளிகள் திறக்கப்பட்டன. அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் மற்றும் அட்லஸ் வரைபட புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
தனியார் பள்ளிகளை பொறுத்தவரை விடுமுறை நாட்களில் பாட புத்தகங்கள் மற்றும் மாணவர்களுக்கு தேவையான உபகரணங்கள், சீருடைகள் வழங்கப்பட்டு விட்டன. மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளின் மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்பு அளித்தனர். இதனால், சிறுவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா கூறுகையில், ''புதிய கல்வி ஆண்டுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றனர். மாணவர்களுக்கான இலவச புத்தகங்கள், நோட்டு புத்தகம், சீருடை அந்தந்த பள்ளிகளில் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு புதிய கல்வி ஆண்டுக்கான வழிகாட்டும் வகுப்புகள் மற்றும் உளவியல் ஆலோசனைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன,'' என்றார்.