மின் கட்டண உயர்வு கண்டன போராட்டம்
மின் கட்டண உயர்வு கண்டன போராட்டம்
மின் கட்டண உயர்வு கண்டன போராட்டம்
ADDED : ஜூலை 27, 2024 01:17 AM
ஊட்டி:மின்சார கட்டண உயர்வை, அரசு திரும்ப பெற கோரி, சி.பி.ஐ.எம்., மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஊட்டியில் மின்வாரியம் அலுவலகம் முன்பு, ஊட்டி தாலுகா செயலாளர் நவீன் சந்திரன் தலைமையில் போராட்டம் நடந்தது.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் சங்கரலிங்கம், ராஜேந்திரன் கண்டன பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வினோத், தாலுகா உறுப்பினர்கள் ராஜரத்தினம், புட்டுசாமி கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று கோஷங்கள் எழுப்பினர்.