/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மருத்துவ பரிசோதனை அவசியம் வருமுன் காப்போம் முகாமில் அறிவுரை மருத்துவ பரிசோதனை அவசியம் வருமுன் காப்போம் முகாமில் அறிவுரை
மருத்துவ பரிசோதனை அவசியம் வருமுன் காப்போம் முகாமில் அறிவுரை
மருத்துவ பரிசோதனை அவசியம் வருமுன் காப்போம் முகாமில் அறிவுரை
மருத்துவ பரிசோதனை அவசியம் வருமுன் காப்போம் முகாமில் அறிவுரை
ADDED : ஜூலை 03, 2024 02:28 AM
அன்னுார்;மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வருமுன் காப்போம் முகாமில் அறிவுறுத்தப்பட்டது.
சுகாதாரத் துறை சார்பில், 'வருமுன் காப்போம்' திட்ட சிறப்பு இலவச மருத்துவ முகாம் குன்னத்துார் நடுநிலைப் பள்ளியில் நடந்தது.
முகாமில், வட்டார மருத்துவ அலுவலர் சுஜாதா பேசுகையில், ''40 வயதுக்கு மேல் உள்ள இருபாலரும், ஆண்டுக்கு ஒரு முறை, சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும். துரித உணவுகளை தவிர்க்க வேண்டும்,'' என்றார். முகாமில், 1,294 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 156 பேருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை, 55 பேருக்கு ஸ்கேன், 61 பேருக்கு இ.சி.ஜி., 442 பேருக்கு ஆய்வக சோதனை செய்யப்பட்டது. 31 பேருக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் 15 பேருக்கு சர்க்கரை நோய் கண்டறியப்பட்டது. மூன்று பேர் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். அன்னுார், கோவை அரசு மருத்துவமனைகள், ஏழு தனியார் மருத்துவமனைகளை சேர்ந்த டாக்டர்கள், செவிலியர்கள், என 50 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
முகாமில், வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், ஊராட்சித் தலைவர் கீதா தங்கராஜ், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கண்ணப்பன், தி.மு.க.,ஒன்றிய செயலாளர் தனபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.