/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ 'போக்சோ' சட்ட விழிப்புணர்வு மாணவியருக்கு போலீசார் அட்வைஸ் 'போக்சோ' சட்ட விழிப்புணர்வு மாணவியருக்கு போலீசார் அட்வைஸ்
'போக்சோ' சட்ட விழிப்புணர்வு மாணவியருக்கு போலீசார் அட்வைஸ்
'போக்சோ' சட்ட விழிப்புணர்வு மாணவியருக்கு போலீசார் அட்வைஸ்
'போக்சோ' சட்ட விழிப்புணர்வு மாணவியருக்கு போலீசார் அட்வைஸ்
ADDED : ஜூன் 12, 2024 12:26 AM
குன்னுார்;குன்னுார் பாய்ஸ் கம்பெனி புனித அன்னாள் மேல்நிலை பள்ளியில், மகளிர் காவல் நிலையம் சார்பில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை சிஸ்டர் பெட்ரிஷியா தலைமை வகித்தார்.
மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கோமதி பேசுகையில், ''பள்ளி மாணவிகளாகிய நீங்கள் படிப்பில் மட்டுமே அதிக கவனம் செலுத்த வேண்டும். தற்போது மொபைல் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், வேறு எந்த தவறான செயல்களுக்கும் செல்லக்கூடாது. வருங்காலத்தில் நல்ல அதிகாரியாக வரவேண்டும். தங்களிடம் யாராவது முறைகேடாக நடந்தால் உடனடியாக பெற்றோரிடமும், பள்ளி ஆசிரியர்களிடமும் தெரிவிக்க மாணவிகள் முன்வர வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து, போக்சோ சட்டம் குறித்தும், கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் தடுப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.நிகழ்ச்சியில், சப்-இன்ஸ்பெக்டர் ராஜம்மாள், காவலர்கள் நித்யா, ஷீபா, பிரியா உட்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியை சுதா ராணி நன்றி கூறினார்.