/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ 'மக்களுடன் முதல்வர்' முகாம் மனு கொடுக்க அழைப்பு 'மக்களுடன் முதல்வர்' முகாம் மனு கொடுக்க அழைப்பு
'மக்களுடன் முதல்வர்' முகாம் மனு கொடுக்க அழைப்பு
'மக்களுடன் முதல்வர்' முகாம் மனு கொடுக்க அழைப்பு
'மக்களுடன் முதல்வர்' முகாம் மனு கொடுக்க அழைப்பு
ADDED : ஜூலை 15, 2024 02:23 AM
அன்னுார்:'மக்களுடன் முதல்வர்' முகாமில், மனு அளிக்க நான்கு ஊராட்சி மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் சென்றடையும் வகையில், 'மக்களுடன் முதல்வர்' என்னும் திட்டத்தின் முதல் கட்டம் கடந்த ஆண்டு நடைபெற்றது.
இரண்டாவது கட்டம், ஜூலை 15 முதல், செப். 15 வரை நடைபெறும் என ஊரக வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது. இதில் தமிழகம் முழுவதும், 37 மாவட்டங்களில், 388 ஒன்றியங்களில், 12,525 ஊராட்சிகளில், 2500 முகாம் நடைபெறுகிறது. ஒவ்வொரு முகாமிலும், நான்கு முதல் ஐந்து ஊராட்சிகளை இணைத்து நடைபெறுகிறது.
முகாமில், 15 துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்பர். முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அன்னுார் ஒன்றியத்தில் வருகிற 16ம் தேதி (நாளை) காலை 10;00 மணி முதல், மதியம் 3:00 மணி வரை, பசூரில் உள்ள எஸ்.ஆர் .மஹால் மண்டபத்தில் முகாம் நடக்கிறது. இந்த முகாமில் பசூர், கஞ்சப்பள்ளி, அல்லப்பாளையம், அ. மேட்டுப்பாளையம் ஆகிய நான்கு ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் மனு அளிக்கலாம்.
இதில் சமூக பாதுகாப்பு திட்ட சிறப்பு துணை கலெக்டர் சுரேஷ் தலைமையில் மனுக்கள் பெறப்படுகிறது. ஊராட்சிகளின் உதவி இயக்குனர் சரவணன், மாவட்ட வழங்கல் அலுவலர் குணசேகரன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
'பொதுமக்கள் முகாமில் பங்கேற்று மனு அளிக்கலாம்' என ஊரக வளர்ச்சித் துறை தெரிவித்துள்ளது.