/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ கேர்பெட்டா சாலையில் குப்பை குவியல் துர்நாற்றத்தால் மக்கள் கடும் அவதி கேர்பெட்டா சாலையில் குப்பை குவியல் துர்நாற்றத்தால் மக்கள் கடும் அவதி
கேர்பெட்டா சாலையில் குப்பை குவியல் துர்நாற்றத்தால் மக்கள் கடும் அவதி
கேர்பெட்டா சாலையில் குப்பை குவியல் துர்நாற்றத்தால் மக்கள் கடும் அவதி
கேர்பெட்டா சாலையில் குப்பை குவியல் துர்நாற்றத்தால் மக்கள் கடும் அவதி
ADDED : ஜூன் 12, 2024 09:49 PM

கோத்தகிரி, - கோத்தகிரி கேர்பெட்டா சாலையில் குப்பைகள் அகற்றப்படாமல், துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட, கோடநாடு - கேர்பெட்டா சாலையில், லாங்வுட் சோலை நுழைவு வாயிலில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், குப்பைத்தொட்டி வைக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் அன்றாடம் சேகரமாகும் குப்பைகள் தொட்டியில் கொட்டப்பட்டு, பேரூராட்சி தூய்மை பணியாளர்களால், உடனுக்குடன் அகற்றப்பட்டு வருகிறது. ஆனால், சில நாட்களாக குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது.
இதனால், தொட்டியில் குப்பைகள் நிரம்பி, வெளியில் சிதறி கிடக்கிறது. துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பிரதான சாலையில் அமைந்துள்ள குடியிருப்பு வாசிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே, திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு முக்கியத்துவம் வழங்கி வரும் கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகம், குப்பைகளை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.