/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு; போலீஸ் - வக்கீல்கள் 'தள்ளு முள்ளு' புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு; போலீஸ் - வக்கீல்கள் 'தள்ளு முள்ளு'
புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு; போலீஸ் - வக்கீல்கள் 'தள்ளு முள்ளு'
புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு; போலீஸ் - வக்கீல்கள் 'தள்ளு முள்ளு'
புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு; போலீஸ் - வக்கீல்கள் 'தள்ளு முள்ளு'
ADDED : ஜூலை 10, 2024 10:08 PM

ஊட்டி : புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வக்கீல்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியாவில் கடந்த 1860 தொடங்கி கடந்த மாதம் வரை, 'இந்திய தண்டனை சட்டம் (ஐ.பி.சி.,), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சி.ஆர்.பி.சி.,), இந்திய சாட்சியங்கள் சட்டம்,' என, 3 சட்டங்கள் அமலில் இருந்து வந்தன.
இந்த சட்டங்களுக்கு மாற்றாக, 'பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்.,), பாரதிய நாகரிக் சுரக்சா சன்ஹிதா (பி.என்.எஸ்.எஸ்.,), பாரதிய சாட்சிய அதினியம்,' என, 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த சட்டங்கள் கடந்த, 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது.
'இந்த புதிய குற்றவியல் சட்டங்களில் சில மோசமான திருத்தங்கள் இருப்பதாகவும்; இதனால் நாட்டில் அமைதியின்மை நிலவ வாய்ப்பு உள்ளதாகவும்,' வக்கீல் சங்கங்கள் மற்றும் பல்வேறு மாநில பார் கவுன்சில்கள் உள்ளிட்டவைகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், நீலகிரி மாவட்ட பார் அசோசியேஷன் சார்பில் வக்கீல்கள் ஊட்டி ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் நேற்று ஈடுபட முயன்றனர்.
அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் 'தள்ளுமுள்ளு' ஏற்பட்டது. பின், புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வக்கீல்கள் கோஷம் எழுப்பினர்.
பார் கவுன்சில் தலைவர் மகாதேவன் தலைமை தாங்கினார். செயலாளர் மேனகா முன்னிலை வகித்தார்.
பார் கவுன்சில் பொருளாளர் ரேஷ்மா, துணை செயலாளர் சுருதி, வக்கீல்கள் விஜயன், சந்திரபோஸ், சிவக்குமார், முனிரத்தினம் உட்பட பலர் பங்கேற்றனர்.