/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மார்க்கெட்டில் பழைய கடைகள் இடிக்கும் பணி பொருட்களை அப்புறப்படுத்தும் வியாபாரிகள் மார்க்கெட்டில் பழைய கடைகள் இடிக்கும் பணி பொருட்களை அப்புறப்படுத்தும் வியாபாரிகள்
மார்க்கெட்டில் பழைய கடைகள் இடிக்கும் பணி பொருட்களை அப்புறப்படுத்தும் வியாபாரிகள்
மார்க்கெட்டில் பழைய கடைகள் இடிக்கும் பணி பொருட்களை அப்புறப்படுத்தும் வியாபாரிகள்
மார்க்கெட்டில் பழைய கடைகள் இடிக்கும் பணி பொருட்களை அப்புறப்படுத்தும் வியாபாரிகள்
ADDED : ஜூன் 12, 2024 09:52 PM

ஊட்டி,- ஊட்டி மார்க்கெட்டில் இரண்டாம் கட்டமாக, பழைய கடைகள் இடிக்கும் பணி நடந்து வருவதால், வியாபாரிகள் பொருட்களை தற்காலிக கடைகளுக்கு மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஊட்டியில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட மார்க்கெட் கட்டடத்தில், 1500 கடைகள் செயல்பட்டு வந்தன. பழமையான இந்த கட்டடத்தை இடித்து புதிய கட்டடம் கட்ட ஊட்டி நகராட்சி நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்றி, அரசுக்கு அறிக்கை அனுப்பியது. அதன்படி, வாகன பார்க்கிங்; புதிய கடை கட்ட கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 18 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. பழைய கடைகளில் கட்டட கழிவுகளை அகற்ற, 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
மார்க்கெட் வியாபாரிகளுக்காக ஊட்டி ஏ.டி.சி., பகுதியில், 181 தற்காலிக கடைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, 160 கடைகள் கட்டப்பட்டுள்ளன. அந்த கடைகளில் வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். முதல் கட்டமாக பழைய கடைகள் இடிக்கும் பணி நிறைவடைந்தது. தற்போது, இரண்டாம் கட்ட பழைய கடைகள் இடிக்கும் பணிகள் ஓரிரு நாளில் துவங்கப்பட உள்ளது. அங்கு கடை வைத்த வியாபாரிகள் கடைகளில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்தி ஏ.டி.சி., பகுதியில் உள்ள தற்காலிக கடைகளுக்கு எடுத்து சென்றனர்.
நகராட்சி கமிஷனர் ஏகராஜ் கூறுகையில், ''தற்காலிக கடைகள் கட்டும் பணி முழுமை பெற்றுள்ளது. இரண்டாம் கட்ட பழைய கடைகள் இடிக்கும் பணி துவங்க இருப்பதால், அங்கு கடை வைத்துள்ள வாடகை பாக்கி இல்லாதவர்களுக்கு கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.