/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ரேஷனில் தரமற்ற அரிசி வினியோகம் இருக்க கூடாது அதிகாரிகளுக்கு உத்தரவு...!மாற்றும் பணியில் மாவட்ட நுகர்பொருள் வாணிப கழகம் ரேஷனில் தரமற்ற அரிசி வினியோகம் இருக்க கூடாது அதிகாரிகளுக்கு உத்தரவு...!மாற்றும் பணியில் மாவட்ட நுகர்பொருள் வாணிப கழகம்
ரேஷனில் தரமற்ற அரிசி வினியோகம் இருக்க கூடாது அதிகாரிகளுக்கு உத்தரவு...!மாற்றும் பணியில் மாவட்ட நுகர்பொருள் வாணிப கழகம்

2.20 லட்சம் கார்டுதாரர்கள்
அதில், நீலகிரி மாவட்டத்தில், 'ஊட்டி, குன்னுார், குந்தா, கோத்தகிரி, கூடலுார் மற்றும் பந்தலுார் தாலுக்காவில் பகுதி நேரம், முழு நேரம்,' என, 412 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. 2.20 லட்சம் கார்டுதாரர்கள் உள்ளனர். அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கார்டுதாரர்கள் வாங்கி வருகின்றனர். இந்நிலையில், ஊட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருட்கள் வாணிக கழக குடோன்களிலிருந்து அந்தந்த பகுதியில் உள்ள குடோன்களுக்கு பெறப்பட்ட அரிசி, கடந்த சில மாதங்களாக தரமற்ற நிலையில் உள்ளதாக, கார்டுதாரர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சுற்றுலா அமைச்சர் உத்தரவு
இதை தொடர்ந்து, ஊட்டியில் உள்ள தமிழக விருந்தினர் மாளிகையில், 5ம் தேதி பொது வினியோக திட்ட குறித்தான ஆய்வு கூட்டம் நடந்தது. அப்போது, 'ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி வினியோகிப்பதை முழுமையாக தடுக்க வேண்டும்,' என, சுற்றுலா துறை அமைச்சர் ராமசந்திரன், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.