Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மழை சமயத்தில் மக்கள் விதிகளை பின்பற்றணும் தகவல் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

மழை சமயத்தில் மக்கள் விதிகளை பின்பற்றணும் தகவல் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

மழை சமயத்தில் மக்கள் விதிகளை பின்பற்றணும் தகவல் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

மழை சமயத்தில் மக்கள் விதிகளை பின்பற்றணும் தகவல் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

ADDED : ஜூலை 22, 2024 02:16 AM


Google News
ஊட்டி:'மழை சமயத்தில் பொது மக்கள் உரிய முன்னெச்சரிக்கைகளை பின்பற்ற வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் லட்சுமி பவ்யா அறிக்கை:

நீலகிரியில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து கன மழை பெய்து வருகிறது. சில பகுதிகளில் அதிகளவு மழை பொழிவு இருப்பதால் நீரோடைகள் நிரம்பி திடீர் வெள்ள பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. பொதுமக்கள் உரிய முன்னெச்சரிக்கைகளை பின் பற்றாததால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அத்தகைய சமயங்களில் உயிரிழப்புகளை தடுக்க பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க சில வழிமுறைகளை தவறாமல் பின் பற்ற வேண்டும்.

அதன்படி, அதிக மழை பொழிவு ஏற்படும் போது பொதுமக்கள் நீரோடைகளுக்கு அருகில் செல்லவோ, அருகில் நடக்கவோ கூடாது; ஆற்றில் குளிக்கவோ ஆற்றினை தனியாகவோ அல்லது வாகனங்கள் மூலம் கடக்கவோ கூடாது; குழந்தைகளை வெள்ள நீரில் விளையாட அனுமதிக்க கூடாது; ஓடும் நீரில் நடக்க வேண்டாம். ஏனெனில் நீரோட்டமானது ஆழமற்றது போல் தோற்றமளிக்கலாம். ஆனால், வேகமாக ஓடுகின்ற நீர் உங்கள் கால்களை இடறி விடலாம்.

அதேபோல், வேகமாக ஓடும் நீரில் நீந்த வேண்டாம். அந்நீரால் அடித்து செல்லப்படலாம் அல்லது நீரில் உள்ள பொருளின் மீது மோதிக்கொள்ள நேரிடலாம். மாவட்டத்தில் அதிக மழை பொழிவின் போது நிலச்சரிவு மற்றும் மரங்கள் விழுந்து உயிர் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால் அத்தகைய நேரங்களில் அத்தியாவசிய பணிகளை தவிர்க்க வேண்டும். வாகனங்களை மரங்களின் அடியிலோ, தடுப்பு சுவர்களின் அருகிலோ நிறுத்துவதை தவிர்க்க வேண்டும்.

அவசரகால எண்கள்


மேலும், பொதுமக்கள் மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்படும் போது, 24 மணி நேரம் இயங்கும் கட்டுப்பாட்டு அறை எண்-1077 க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்.

தவிர, ஊட்டி கோட்டம் - 0423- 2445577, குன்னுார் கோட்டம் - 0423- 2206002, கூடலுார் கோட்டம் - 04262- 261295, ஊட்டி வட்டம் - 0423- 2442433, குன்னுார் வட்டம் - 0423- 2206102, கோத்தகிரி வட்டம் - 04266- 271718, குந்தா வட்டம் - 0423- 2508123, கூடலுார் வட்டம் - 04262- 261252 மற்றும் பந்தலுார் வட்டம் - 04262 - 220734 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு, அறிக்கையில் கூறட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us