/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ நீலகிரி படுக தேச பார்ட்டி; மாநில அரசுக்கு மனு நீலகிரி படுக தேச பார்ட்டி; மாநில அரசுக்கு மனு
நீலகிரி படுக தேச பார்ட்டி; மாநில அரசுக்கு மனு
நீலகிரி படுக தேச பார்ட்டி; மாநில அரசுக்கு மனு
நீலகிரி படுக தேச பார்ட்டி; மாநில அரசுக்கு மனு
ADDED : மார் 11, 2025 10:47 PM
ஊட்டி; நீலகிரி படுக தேசப்பார்ட்டி நிறுவன தலைவர் மஞ்சை மோகன், மாநில அரசு தலைமை செயலாளருக்கு அனுப்பியுள்ள மனு:
மாவட்ட நிர்வாகத்திடம் கடந்த மாதம், மலை மாவட்டம் தொடர்பாக, 8 அம்ச கோரிக்கைகளை கொடுத்து விவாதித்தோம். கலெக்டர் அளித்த விளக்கங்களை, எழுத்து பூர்வமாக தர வேண்டும் என்று கடந்த ஒரு மாதமாக கேட்டு வந்த நிலையில் இன்னும் பதிலை பெற முடியவில்லை.
நீலகிரியில் வாழும் படுகர் சமுதாய மக்களின் நலனுக்காக அரசு இடத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டப்பட்டுள்ள இளம் படுகர் சங்கம், அரசு சங்க விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டு வருகிறது. ஊட்டி பிரீக்ஸ் பள்ளியின் தலைவராக கலெக்டர் உள்ளார். இப்பள்ளியின் நிர்வாக குளறுபடிகளை தீர்க்கப்படாமல் உள்ளது. எனவே, நாங்கள் கொடுத்த, 8 அம்ச கோரிக்கையை பரிசீலித்து, எங்களுக்கு எழுத்து பூர்வமான பதிலை, கலெக்டரிடம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.