/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ தேசிய அளவிலான கேரம் போட்டி கோத்தகிரி பள்ளி மாணவர் தேர்வு தேசிய அளவிலான கேரம் போட்டி கோத்தகிரி பள்ளி மாணவர் தேர்வு
தேசிய அளவிலான கேரம் போட்டி கோத்தகிரி பள்ளி மாணவர் தேர்வு
தேசிய அளவிலான கேரம் போட்டி கோத்தகிரி பள்ளி மாணவர் தேர்வு
தேசிய அளவிலான கேரம் போட்டி கோத்தகிரி பள்ளி மாணவர் தேர்வு
ADDED : ஜூலை 17, 2024 12:00 AM

ஊட்டி;கீழ்கோத்தகிரி அவ்வூர் பகுதியை சேர்ந்த ஆசிரியர் நல்லமுத்துவின் மகன் ரெணோ. அவ்வூர் அரசு துவக்கப்பள்ளியில் படித்த இவர், சிறு வயது முதல் கேரம் விளையாட்டில் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார்.
தற்போது, கோத்தகிரி ஐ.சி.எஸ்., பள்ளியில், 12ம் வகுப்பு படிக்கும் இவர், திருவண்ணாமலையில் நடந்த மாநில கேரம் போட்டியில் பங்கேற்று விளையாடினார். இதில், மூன்றாம் இடம் பிடித்து உத்திரபிரதேசம் கான்பூரில் நடக்கும் தேசிய அளவிலான கேரம் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.