ADDED : ஜூன் 30, 2024 01:01 AM

செய்முறை:மட்டனை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து, அதனுடன் 50 கிராம் தயிர் சேர்த்து நன்றாகக் கலந்து அரைமணி நேரம் ஊறவைக்கவும். முந்திரிப் பருப்பு, கசகசாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் ஏலக்காய், கிராம்பு, பட்டை சேர்த்துப் பொரிந்ததும் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு இஞ்சி -பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து பச்சை வாசனை நீங்கும்வரை வதக்கவும். அதனுடன் தயிரில் ஊறவைத்த மட்டனைச் சேர்த்துக் கிளறி, உப்பு, தேவையான அளவு வெந்நீர் சேர்த்து வேகவிடவும்.
கலவை கொதித்ததும் அதில் தேங்காய் விழுது, முந்திரிப் பருப்பு, - கசகசா விழுது சேர்த்து நன்கு கலந்து, மிதமான தீயில் வேகவைக்கவும். மட்டன் நன்கு வெந்து குருமா ஓரளவு கெட்டியானவுடன், கரம் மசாலாத்தூள் சேர்த்துக் கலக்கவும். நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி சூடாகப் பரிமாறவும். மட்டன் குருமாவை, சாதம், இட்லி, தோசை மற்றும் சப்பாத்தியுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.