/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ முத்துமாரியம்மன் கோவில் முத்து பல்லக்கு ஊர்வலம் முத்துமாரியம்மன் கோவில் முத்து பல்லக்கு ஊர்வலம்
முத்துமாரியம்மன் கோவில் முத்து பல்லக்கு ஊர்வலம்
முத்துமாரியம்மன் கோவில் முத்து பல்லக்கு ஊர்வலம்
முத்துமாரியம்மன் கோவில் முத்து பல்லக்கு ஊர்வலம்
ADDED : ஜூன் 03, 2024 12:48 AM

குன்னுார்;குன்னுார் ஆழ்வார்பேட்டை முத்துமாரியம்மன் திருக்கோவிலில், 59வது ஆண்டு கரக உற்சவ விழா மற்றும் முத்து பல்லக்கு விழா நடந்தது.
விழாவையொட்டி கடந்த, 30ம் தேதி அதிகாலை கணபதி ஹோமம் நடந்தது.
தொடர்ந்து கோதண்ட ராமர் கோவிலில் இருந்து துவங்கிய பால்குட ஊர்வலம் கோவிலை அடைந்ததும் அபிஷேக ஆராதனை, கொடியேற்றம் நடந்தது.
31ம் தேதி கன்னி மாரியம்மன் கோவிலில் இருந்து கரகம் அழைத்துவரப்பட்டது. 1ம் தேதி முனீஸ்வரர் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டு கோவிலை அடைந்தது.
அதன்பின், திருவிளக்கு பூஜை, அம்மன் திரு வீதி உலா ஆகியவை நடந்தது. நேற்று உச்சி கால பூஜை, கரகம் கங்கை புறப்படுதல் நிகழ்ச்சியும் நடந்தது இன்று மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை முத்துமாரியம்மன் கோவில் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.