ADDED : ஜூலை 22, 2024 10:51 PM

கூடலுார்;கூடலுார் அருகே வாழை தோட்டத்தில் கிடந்த, 12 அடி மலைப்பாம்பை வன ஊழியர்கள் பத்திரமாக மீட்டு வனத்தில் விடுவித்தனர்.
கூடலுார், தொரப்பள்ளி அள்ளுர்வயல் பகுதியில், உண்ணி என்பவர் நேந்திரன் வாழை பயிரிட்டுள்ளார். நேற்று மதியம், 3:30 மணிக்கு அவர் வாழை தோட்டத்திற்கு சென்றபோது, அங்குள்ள கால்வாயில், மலைப்பாம்பு சுருண்ட நிலையில் கிடந்தது தெரிய வந்தது. மக்கள், பாம்பை காண அப்பகுதியில் கூடினர்.
கூடலுார் வனக்காவலர் பகிஷ்குமார், சிறப்பு படை காவலர் கோவிந்தராஜ் அப்பகுதிக்கு சென்று வாழை தோட்டத்தில் கிடந்த, 12 அடி நீளம் உள்ள, மலைப்பாம்பை பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட மலைப்பாம்பு முதுமலை வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.