Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ 'மலையில் பேரிடர் ஏற்படுவதை தவிர்க்க முடியாது' : இயற்கையை பாதுகாக்க தவறியதன் எதிரொலி: ஆராய்ச்சியாளர் கருத்து

'மலையில் பேரிடர் ஏற்படுவதை தவிர்க்க முடியாது' : இயற்கையை பாதுகாக்க தவறியதன் எதிரொலி: ஆராய்ச்சியாளர் கருத்து

'மலையில் பேரிடர் ஏற்படுவதை தவிர்க்க முடியாது' : இயற்கையை பாதுகாக்க தவறியதன் எதிரொலி: ஆராய்ச்சியாளர் கருத்து

'மலையில் பேரிடர் ஏற்படுவதை தவிர்க்க முடியாது' : இயற்கையை பாதுகாக்க தவறியதன் எதிரொலி: ஆராய்ச்சியாளர் கருத்து

ADDED : ஆக 01, 2024 12:26 AM


Google News
Latest Tamil News
பந்தலுார் : 'கேரள மாநிலம் வயநாடு பகுதியில், மண்ணின் திறன் குறைவால் பேரிடர் ஏற்படுவதை தடுக்க முடியாது,' என, கூறப்பட்டுள்ளது.

பந்தலுாரை சேர்ந்த காலநிலை மாற்றம் குறித்த ஆராய்ச்சியாளர் முனைவர் சிவசக்திவேல் கூறியதாவது:

வயநாடு கடல் மட்டத்திலிருந்து சராசரியாக, 700 முதல் 2,100 மீட்டர் உயரத்தில் உள்ள மலைபகுதியாகும். கூர்மையான சரிவுகள் மற்றும் உயரமான நிலப்பரப்பு, நிலச்சரிவு ஏற்பட காரணமாக அமைகிறது. வயநாடு மண் முதன்மையாக 'லேட்டரைட்' வகை ஆகும். அதில், இரும்பு, ஆக்சைடு அதிக அளவு இருப்பதால் அதன் புகு திறன் குறைந்து, நீர் ஊடுருவுதல் கடினமானதாக மாறுகிறது.

இந்த மண்ணில் ஒரு பகுதியாக இருக்கும் அலுமினியம் மண்ணில் நீர் புகும் திறனை குறைத்து, மழை நீர் ஊடுருவி செல்வதை தடுக்கிறது. மேலும் அலுமினியம் அதிகளவுநீரை பிடித்து வைத்து, வெள்ள பெருக்கு மற்றும் பேரிடரை ஏற்படுத்தும். இயற்கையை பாதுகாக்க தவறிய, இதுபோன்ற உறுதிதன்மையற்ற மலைப்பகுதியில், கட்டுமானங்கள் அதிகரிப்பு, மழை வெள்ளம் வழிந்தோட வழியில்லாதது போன்ற சூழல் ஏற்படுகிறது. இதனால், இதுபோன்ற இயற்கை பேரிடர் தொடரும். எனவே, இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறும் தகவல்களை அரசு கருத்தில் கொள்ள வேண்டும். தொடர்ந்து, அதற்கேற்ப தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டால் மட்டுமே எதிர்காலத்தில் ஓரளவு பாதிப்புகளை குறைக்க முடியும்.

இவ்வாறு சிவசக்திவேல் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us