ADDED : ஜூலை 02, 2024 12:39 AM

ஊட்டி:கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் இலவச மருத்துவ முகாம், ஊட்டியில் நடந்தது. முகாமை எஸ்.பி., சுந்தரவடிவேல் துவக்கி வைத்தார்.
எஸ்.என்.ஆர்.,சன்ஸ் அறக்கட்டளையின் சி.இ.ஓ., ராம்குமார், மருத்துவ இயக்குனர் ராஜகோபால், மருத்துவ கண்காணிப்பாளர் அழகப்பன், மக்கள்தொடர்பு மேலாளர் பிரகதீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
இம்முகாமில், மகளிர் மருத்துவம், எலும்பியல், வயிறு, குடல், நரம்பியல், சிறுநீரகவியல், பல், இருதயம், நுரையீரல் போன்ற துறைகளுக்கான மருத்துவ நிபுணர்களால் இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. அறுவை சிகிச்சை தேவைப்படுவோர்களுக்கு, 25 சதவீதம் வரை கட்டண சலுகை வழங்கப்பட்டது. திரளானோர் பங்கேற்றனர்.