/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ 'மா.கம்யூ., ஓட்டுகள் பிரிந்ததே தோல்விக்கான காரணமாகும்!' 'மா.கம்யூ., ஓட்டுகள் பிரிந்ததே தோல்விக்கான காரணமாகும்!'
'மா.கம்யூ., ஓட்டுகள் பிரிந்ததே தோல்விக்கான காரணமாகும்!'
'மா.கம்யூ., ஓட்டுகள் பிரிந்ததே தோல்விக்கான காரணமாகும்!'
'மா.கம்யூ., ஓட்டுகள் பிரிந்ததே தோல்விக்கான காரணமாகும்!'
ADDED : ஜூன் 05, 2024 09:53 PM

பாலக்காடு : லோக்சபா தேர்தலில், பாலக்காடு தொகுதியில் மா.கம்யூ., கட்சியின் ஓட்டுகள் பிரிந்ததால், தோல்விக்கு வழி வகுத்தது, என, அக்கட்சியின் மாவட்ட செயலாளர் சுரேஷ்பாபு தெரிவித்தார்.
பாலக்காடு மாவட்ட மா.கம்யூ., அலுவலகத்தில், பத்திரிகையாளர் சந்திப்பில், அக்கட்சியின் மாவட்ட செயலாளர் சுரேஷ்பாபு பேசியதாவது:
லோக்சபா தேர்தலில், பாலக்காடு தொகுதியில் மா.கம்யூ., கட்சிக்கு கிடைக்க வேண்டிய ஓட்டுகள் பிரிந்து, சிதறி போய்விட்டன. ஓட்டுகள் பிரிந்ததே தோல்விக்கு காரணமாகும். இதனால், 40 ஆயிரம் கட்சி ஓட்டுகளே குறைந்துள்ளது.
வலுவான பகுதியான மலம்புழா மற்றும் ஒற்றைப்பாலத்தில், பெரிய அளவில் ஓட்டுகள் சிதறி விட்டது. தோல்விக்கான உண்மையான காரணங்களை அறிந்து, சரி செய்ய வேண்டும்.
தொகுதியை திரும்ப பெறுவதற்கு கீழ் மட்டத்திலிருந்து வலுவான செயல் திட்டங்களை கொண்டு வருவோம்.
இவ்வாறு, பேசினார்.