/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ குன்னுாரில் கருஞ்சிறுத்தை அச்சத்தில் உள்ளூர் மக்கள் குன்னுாரில் கருஞ்சிறுத்தை அச்சத்தில் உள்ளூர் மக்கள்
குன்னுாரில் கருஞ்சிறுத்தை அச்சத்தில் உள்ளூர் மக்கள்
குன்னுாரில் கருஞ்சிறுத்தை அச்சத்தில் உள்ளூர் மக்கள்
குன்னுாரில் கருஞ்சிறுத்தை அச்சத்தில் உள்ளூர் மக்கள்
ADDED : ஜூலை 08, 2024 12:12 AM
குன்னுார்:குன்னுாரில் இரவு நேரங்களில் மீண்டும் உலா வரும் கருஞ்சிறுத்தையால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கரடி சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் உள்ள நிலையில், கடந்த சில நாட்களாக கருஞ்சிறுத்தையின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் இரவு, 10:45 மணியளவில் குன்னுார், 'ஆப்பிள்பி' பகுதியில் கருஞ்சிறுத்தை சென்றதை மக்கள் பார்த்துள்ளனர். வனத்துறைக்கு அளித்த புகாரின் பேரில், வேட்டை தடுப்பு காவலர்கள் ஆய்வு செய்தனர்.
ஏற்கனவே, பழைய அருவங்காடு, உபதலை, வள்ளுவர் நகர், வாசுகி நகர், பழத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கருஞ்சிறுத்தை நடமாட்டம் இருந்துள்ளது.
வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகையில்,'நாய், முயல் உட்பட சிறு விலங்குகளை உணவுக்காக கருஞ்சிறுத்தை வேட்டையாடி வருகிறது. குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில் உள்ள நாய்களை வேட்டையாட இந்த கருஞ்சிறுத்தைகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வருகின்றன. மக்களை தாக்கும் முன்பு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.