/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பாரம் தாங்குமா பாலம்: பொதுமக்கள் அச்சம் பாரம் தாங்குமா பாலம்: பொதுமக்கள் அச்சம்
பாரம் தாங்குமா பாலம்: பொதுமக்கள் அச்சம்
பாரம் தாங்குமா பாலம்: பொதுமக்கள் அச்சம்
பாரம் தாங்குமா பாலம்: பொதுமக்கள் அச்சம்
ADDED : ஜூலை 03, 2024 02:35 AM

மேட்டுப்பாளையம்;ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று, மண் லாரிகள் பாலத்தின் மீது செல்வதால், காந்தையாறு பாலத்துக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
சிறுமுகையை அடுத்த லிங்காபுரத்திற்கும், காந்தவயலுக்கும் இடையே காந்தையாறு ஓடுகிறது. இந்த ஆற்றின் குறுக்கே, 2005ம் ஆண்டு, உயர் மட்ட பாலம் கட்டப்பட்டது.
இப்பாலத்தின் வழியாக காந்தவயல், காந்தையூர், மொக்கை மேடு, உளியூர், ஆளூர், தட்டப்பள்ளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மலைவாழ் மக்களும், லிங்காபுரம், சிறுமுகை ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகளும் சென்று வருகின்றனர். பவானிசாகர் அணையின், நீர்த்தேக்க பகுதியில் உள்ள வண்டல் மண்ணை எடுக்க அரசு அனுமதி வழங்கியதை அடுத்து, விவசாயிகள் லாரிகளில் மண்ணை எடுத்து வருகின்றனர். இந்த லாரிகள் அனைத்தும் லிங்காபுரம், காந்தையாறு பாலம், காந்தவயல் கிராமம் வழியாக பவானிசாகர் அணை நீர் தேக்கப் பகுதியான தட்டப்பள்ளத்துக்கு, சென்று மண்ணை ஏற்றி வருகின்றன. தினமும் காலையிலிருந்து மாலை வரை, ஏராளமான லாரிகள் மண்ணை ஏற்றி வருகின்றன. இப்பாலம் கட்டி, 20 ஆண்டுகள் ஆகின்றன. தினமும் வண்டல் மண்ணை எடுத்து வரும், 70 லிருந்து 80க்கும் மேற்பட்ட லாரிகள், இப்பாலத்தின் வழியாக செல்கின்றன. ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று லாரிகள் பாலத்தின் மீது செல்வதால், பாலத்திற்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சம், மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. புதிய பாலம் கட்டி முடிக்கும் வரை, இந்த பாலம் தான் மலைவாழ் மக்களுக்கும், விவசாயிகளுக்கும் உயிர் நாடியாக உள்ளது. இந்த பாலத்துக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால், பொதுமக்களும், விவசாயிகளும் பாதிக்கப்படுவதோடு, புதிய பாலம் கட்டுமான பணிகளும் பாதிப்பு அடையும். எனவே பாலத்தை பாதுகாக்க சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.