/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ கேத்தியில் வேருடன் சாய்ந்த மரம்; போலீஸ் ஸ்டேஷன் கட்டடம் சேதம் கேத்தியில் வேருடன் சாய்ந்த மரம்; போலீஸ் ஸ்டேஷன் கட்டடம் சேதம்
கேத்தியில் வேருடன் சாய்ந்த மரம்; போலீஸ் ஸ்டேஷன் கட்டடம் சேதம்
கேத்தியில் வேருடன் சாய்ந்த மரம்; போலீஸ் ஸ்டேஷன் கட்டடம் சேதம்
கேத்தியில் வேருடன் சாய்ந்த மரம்; போலீஸ் ஸ்டேஷன் கட்டடம் சேதம்
ADDED : ஜூலை 25, 2024 09:52 PM

குன்னுார் : குன்னுார் கேத்தி போலீஸ் ஸ்டேஷன் மீது கற்பூர மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் கட்டடம் சேதமடைந்தது.
ஊட்டி குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சாரல் மழையுடன் பலத்த காற்று வீசி வருகிறது. நேற்று மதியம், 2:00 மணி அளவில் கேத்தி போலீஸ் ஸ்டேஷன் மற்றும் சாலையில் கற்பூர மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது.
போலீஸ் ஸ்டேஷன் கட்டடம் மற்றும் அருகில் இருந்த டீ கடை சேதமானது. இதனால், கேத்தி பாலடா உட்பட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலின் பேரில், கேத்தி பேரூராட்சி நிர்வாகத்தினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மரத்தை வெட்டி அகற்றினர். ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.