/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பனியின் தாக்கம் குறைவால் இலை வரத்து அதிகரிப்பு;அறுவடை பணியில் பெண் தொழிலாளர்கள் பனியின் தாக்கம் குறைவால் இலை வரத்து அதிகரிப்பு;அறுவடை பணியில் பெண் தொழிலாளர்கள்
பனியின் தாக்கம் குறைவால் இலை வரத்து அதிகரிப்பு;அறுவடை பணியில் பெண் தொழிலாளர்கள்
பனியின் தாக்கம் குறைவால் இலை வரத்து அதிகரிப்பு;அறுவடை பணியில் பெண் தொழிலாளர்கள்
பனியின் தாக்கம் குறைவால் இலை வரத்து அதிகரிப்பு;அறுவடை பணியில் பெண் தொழிலாளர்கள்
ADDED : மார் 12, 2025 10:21 PM
ஊட்டி; நீலகிரியில் உறைபனி தாக்கம் குறைவால் இலை வரத்து படிப்படியாக அதிகரித்துள்ளது.
நீலகிரியில் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 15 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை, நுாற்றுக்கும் மேற்பட்ட தனியார் தேயிலை தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.
சிறு விவசாயிகள் தங்களது தேயிலை தோட்டத்தில் பறிக்கும் பசுந்தேயிலையை அந்தந்த பகுதியில் உள்ள தொழிற்சாலைக்கு வினியோகித்து வருகின்றனர்.
ஆண்டுதோறும் நவ., இறுதி, டிச., முதல் வாரத்தில் தென்படும் உறைபனியின் தாக்கம் பிப்., மாதம் இறுதி வரை தென்படும். உறை பனியால் தேயிலை செடிகள் கருகுவதால் தேயிலை செடிகளை பாதுகாக்க விவசாயிகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்கின்றனர். அறுவடைக்கு தயாரான இலைகளை அவசர, அவசரமாக கொள்முதல் செய்வது வழக்கம்.
இம்முறை உறைப்பனி தாக்கத்திற்கு இடையே நீர் பனியும் தென்பட்டது. அவ்வப்போது மழையும் பெய்தது. காலநிலையில் ஏற்பட்ட மாற்றத்தால் குறிப்பாக உறைபனியால் கருகி பாதிப்படையும் தேயிலை தோட்டங்கள் இம்முறை தப்பியது.
இலை வரத்து பரவலாக அதிகரிப்பு
பொதுவாக, உறைபனி அதிகளவில் தென்படும் போது, குறிப்பாக ஜன., முதல் ஏப்., மாதம் வரை பசுந்தேயிலை வரத்து படிப்படியாக குறைந்து விடும்.
கூட்டுறவு, தனியார் தொழிற்சாலைகளில் இலை வரத்து படிப்படியாக குறைந்து தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்படும். நடப்பாண்டு பனி தாக்கம் குறைந்து மழை பெய்ததால், தேயிலை தோட்டங்கள் பாதிப்பு குறைந்துள்ளது. இலை வரத்தும் பரவலாக வந்து கொண்டிருக்கிறது.
ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பெண் தொழிலாளர்கள் அறுவடை பணியில் ஈடுபட்டுள்ளனர். தேயிலை தொழிற்சாலைகளில் தேயிலை துாள் உற்பத்தியும் கடந்தாண்டை காட்டிலும் கணிசமாக உயர்ந்துள்ளது.