Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ குன்னுாரில் சோலை மரங்களை அழிக்க முயற்சி அத்துமீறும் நகராட்சியால் நிலச்சரிவு அபாயம்

குன்னுாரில் சோலை மரங்களை அழிக்க முயற்சி அத்துமீறும் நகராட்சியால் நிலச்சரிவு அபாயம்

குன்னுாரில் சோலை மரங்களை அழிக்க முயற்சி அத்துமீறும் நகராட்சியால் நிலச்சரிவு அபாயம்

குன்னுாரில் சோலை மரங்களை அழிக்க முயற்சி அத்துமீறும் நகராட்சியால் நிலச்சரிவு அபாயம்

ADDED : ஜூன் 11, 2024 01:24 AM


Google News
Latest Tamil News
குன்னுார்;குன்னுாரில் வனத்துறை நடவு செய்த சோலை மர நாற்றுக்களை அழிக்கும் விதமாக, நகராட்சி பொக்லைன் கொண்டு நடந்த மண் அகற்றும் பணி வனத்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டது.

குன்னுார் நகராட்சிக்கு உட்பட்ட, 25வது வார்டு 'ஹேர்வுட்' குடியிருப்பு, காந்தி மண்டபம் அருகிலுள்ள பகுதிகளில் கடந்த, 2021ம் ஆண்டு ஜூன் மாதம், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளுக்காக, மாவட்ட வனத்துறை சார்பில், 1,000 மரக்கன்றுகள் நடவு திட்டம் துவக்கப்பட்டது.

இந்த பகுதிகளில், நாவல், விக்கி, சம்மந்தி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் வளரும் அரியவகை மரங்கள் நடவு செய்யப்பட்டன. தொடர்ந்து, பல சோலை மரங்கள் குறிப்பிட்ட உயரத்திற்கு வளர்ந்துள்ளது.

இந்நிலையில், நேற்று காலை தீயணைப்பு நிலையம் அருகே, மர நாற்றுக்கள் நடவு செய்த இடத்தில் நகராட்சியின் பொக்லைன் கொண்டு மண் அகற்றும் பணி நடந்தது. இதனை அறிந்த நெடுஞ்சாலை துறையினர் மற்றும் வனத்துறையினர் அங்கு வந்து பணிகளை தடுத்து நிறுத்தினர்.

கன்டெய்னர் வைக்க மண் அகற்றம்


சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,'ஒரு தனியார் சங்கத்தினரின் கன்டெய்னரை இங்கு கொண்டு வந்து வைக்க, நகராட்சி பொக்லைன் பயன்படுத்தி மண் அகற்றப்பட்டது. இங்கு கழிப்பிடமும் அமைப்பதாக கூறப்படுகிறது. வளர்ச்சி பணிகள் செய்வதாக கூறி, நகராட்சி நிர்வாகம் சோலை மரங்கள் உள்ள பகுதியில், பொக்லின் பயன்படுத்தி மண் அகற்றுவதால் நிலச்சரிவு அபாயமும் உள்ளது. இப்பகுதிகளில் வனத்துறை சார்பில் நடவு செய்த அரிய வகை மரங்களை முறையாக பராமரித்து வளர்க்க வேண்டும்,'என்றனர்.

தேவையில்லாத இடத்தில் வளர்ச்சி பணி


குன்னுார் 'லெவல் கிராசிங்' பகுதியில் கழிப்பிட வசதி இல்லாமல் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போதிய கழிப்பிட வசதி இல்லாமல் உள்ளது.

மவுண்ட் ரோட்டில் உள்ள கழிப்பிடம் பயன்படுத்த முடியாத அவல நிலையில் உள்ளது. மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட் கழிப்பிடங்களில், 10 ரூபாய் வசூலித்த போதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இவற்றை முறையாக ஆய்வு செய்து சீரமைக்காமல், சோலை அழித்து மீண்டும் கழிப்பிடம் அமைத்தால் கடும் அதிருப்தி ஏற்பட வாய்ப்புள்ளது.

குன்னுார் வனச்சரகர் ரவீந்திரநாத் கூறுகையில், ''குன்னுாரில் நடந்த மர நாற்றுக்களை அழிக்கும் நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டது. எக்காரணத்தைக் கொண்டும் மரநாற்றுக்கள் நடவு செய்த இடத்தில் வளர்ச்சி பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது. சோலை காடுகளை அதிகரிக்க வேண்டும் என்பதே அரசின் உத்தரவாகும்,'' என்றார்.

அமைச்சர் வாக்குறுதி வீண்

தமிழகத்தில், 23.7 சதவீதம் மட்டுமே சோலை மரங்கள் உள்ளதால், 33 சதவீதமாக உயர்த்துவதற்கு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக, வனத்துறை சார்பில், 2022ல், 2.50 கோடி; 2023ல் 7.50 கோடி; 2024ல், 15 கோடி நாற்றுகள் நடவு செய்ய உத்தரவிட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதனை சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஏற்கனவே பல நிகழ்ச்சிகளில் தெரிவித்துள்ளார். இந்நிலையில், நடவு செய்யப்பட்ட மர நாற்றுக்களை நகராட்சி நிர்வாகம் அழிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது, அரசுக்கு எதிரான செயலாக கருதப்படுகிறது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us