/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ கன மழையால் நிரம்பிய குந்தா அணை; 400 கன அடி உபரி நீர் வெளியேற்றம் கன மழையால் நிரம்பிய குந்தா அணை; 400 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
கன மழையால் நிரம்பிய குந்தா அணை; 400 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
கன மழையால் நிரம்பிய குந்தா அணை; 400 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
கன மழையால் நிரம்பிய குந்தா அணை; 400 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
ADDED : ஜூலை 18, 2024 12:26 AM

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில், தென்மேற்கு பருவமழை தாமதமாக துவங்கினாலும் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த மூன்று நாட்களாக பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது.
அதில், மஞ்சூர் குந்தா அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான கட்லாடா, ஒசஹட்டி, தங்காடு தோட்டம், பிக்குலி நீரோடைகளில் வழக்கத்தை விட தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு, 400 கன அடி நீர் வரத்து உள்ளது.
நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, குந்தா அணையின் முழு கொள்ளளவான, 89 அடியில் தண்ணீர் நிரம்பியது. அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நேற்று காலை, 7:00 மணியிலிருந்து, 2 மதகுகளில் வினாடிக்கு தலா, 200 கன அடி வீதம், 400 கன அடி உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.
நேற்று மதியம், 2:00 மணி நிலவரப்படி, 'முக்கூர்த்தி, 18க்கு 16 அடி, பைக்காரா, 100க்கு 68, சாண்டிநல்லா 45க்கு 36, கிளன்மார்கன் 33க்கு 27, மாயார் 17க்கு 16, அப்பர்பவானி 210க்கு 138, பார்சன்ஸ் வேலி 77க்கு 52, போர்த்தி மந்து 130க்கு 95, அவலாஞ்சி 171க்கு 95, எமரால்டு 184க்கு 98, குந்தா 89க்கு 89, கெத்தை 156க்கு 152, பில்லுார் 100க்கு 95 அடிவரை அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
தொடர் மழை காரணமாக, கடந்த இரண்டு நாட்களில், அவலாஞ்சியில், 67.5 செ.மீ., அப்பர்பவானியில், 46.5 செ.மீ., எமரால்டு, 26 செ.மீ., மழை பெய்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய இடங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பெரும்பாலான அணைகளில் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.