Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ சித்தி விநாயகர் கோவிலில் 10ல் கும்பாபிஷேக விழா

சித்தி விநாயகர் கோவிலில் 10ல் கும்பாபிஷேக விழா

சித்தி விநாயகர் கோவிலில் 10ல் கும்பாபிஷேக விழா

சித்தி விநாயகர் கோவிலில் 10ல் கும்பாபிஷேக விழா

ADDED : ஜூலை 08, 2024 12:31 AM


Google News
சோமனுார்;ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா, வரும் 10ம் தேதி நடக்கிறது.

சோமனுார் அடுத்த தொட்டிபாளையத்தில் சித்தி விநாயகர், மாகாளியம்மன் கோவில்கள் உள்ளன. இங்கு திருப்பணிகள் நடந்தன.

இன்று காலை, 6:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்குகிறது.

காப்பு கட்டுதல், வாஸ்து பூஜை மற்றும் முதல்கால ஹோமம் நடக்கிறது. 9ம் தேதி இரு கால ஹோமம் நடக்கிறது.

வரும், 10ம்தேதி காலை நான்காம் கால ஹோமம் முடிந்து 7:00 மணிக்கு சித்தி விநாயகர், மாகாளியம்மன், முருகன், வெள்ளையம்மாள், சிவ துர்க்கை அம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us