Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ காட்டு யானைகளை விரட்டும் பணியில் கும்கிகள்

காட்டு யானைகளை விரட்டும் பணியில் கும்கிகள்

காட்டு யானைகளை விரட்டும் பணியில் கும்கிகள்

காட்டு யானைகளை விரட்டும் பணியில் கும்கிகள்

ADDED : ஜூலை 25, 2024 09:54 PM


Google News
Latest Tamil News
கூடலுார் : கூடலுார் தேவர்சோலை அருகே , காட்டு யானைகளை விரட்ட வலியுறுத்தி மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், காட்டு யானைகள் விரட்டும் பணியில் நான்கு கும்கி யானைகள் ஈடுபட்டுள்ளன.

கூடலுார் தேவர்சோலையை ஒட்டிய நெல்லிக்குன்னு, காரக்குன்னு, அஞ்சுக்குன்னு, செறுமுள்ளி, கவுண்டன்கொல்லி குடியிருப்பு பகுதிகளில் இரவில் காட்டு யானைகள் நுழைந்து விவசாய பயிர்கள், வாகனங்களை சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருகின்றன.

இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி, அஞ்சுகுன்னு பகுதியில் கிராம மக்கள், 11ம் தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதுமலையிலிருந்து சீனிவாசன், வசீம் ஆகிய 'கும்கி' யானைகள் மூலம் காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், மக்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட, 4 பேர் நேற்று முன்தினம், மாலை மொட்டை அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே நேற்று முன்தினம், முதுமலையிலிருந்து அழைத்து வரப்பட்ட விஜய் மற்றும் பொம்மன் ஆகிய கும்கி யானைகள்; நேற்று முதல் காட்டு யானை விரட்டு பணியில் ஈடுபட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை, கூடலுார் டி.எஸ்.பி., வசந்தகுமார் நேற்று சந்தித்து, 'பிரச்னை தொடர்பாக மாவட்ட கலெக்டர் தலைமையில் நாளை (இன்று), நடைபெறும் கூட்டத்தில், இப்பகுதி மக்கள் தரப்பில், நான்கு பேர் பங்கேற்று, பிரச்னை குறித்து தெரிவிக்கலாம்; எனவே, போராட்டத்தை கைவிட வேண்டும்,' என, அறிவுறுத்தினார். இது தொடர்பாக, அனைவரிடமும் பேசி முடிவு தெரிவிப்பதாக கூறிய மக்கள், நேற்று, மாலை வரை போராட்டம் தொடர்ந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us