/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ தரமில்லாமல் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்த அவலம் தரமில்லாமல் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்த அவலம்
தரமில்லாமல் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்த அவலம்
தரமில்லாமல் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்த அவலம்
தரமில்லாமல் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்த அவலம்
ADDED : ஜூலை 17, 2024 11:45 PM

குன்னுார் : குன்னுார் ஓட்டுபட்டறை பகுதியில், 28 லட்சம் ரூபாய் மதிப்பில் தரம் இல்லாமல் அமைக்கப்பட்ட தடுப்புச்சுவர் மூன்றே மாதத்தில் இடிந்து விழுந்தது.
குன்னுார் ஓட்டுபட்டறை பகுதியில் இருந்த ரேஷன் கடை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து விழுந்து புதிதாக கட்டப்பட்டது. இந்த கட்டடத்தின் தடுப்புசுவர் கட்ட, நகராட்சிக்கு, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு எஸ்.ஏ.டி.பி., திட்டத்தின் கீழ், 28 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.
தொடர்ந்து,'நகராட்சி சார்பில், 8 மீட்டர் நீளத்தில் ஒரு பகுதி, 2 மீட்டர் உயரம், மறு பகுதி, 4 மீட்டர் உயரம்,' என்ற அளவில் தடுப்புச்சுவர் அமைக்க டெண்டர் விடப்பட்டு பணிகள் நடந்தது. இந்நிலையில், தடுப்பு சுவர் கட்டப்பட்டு 3 மாதங்கள் கூட ஆகாத நிலையில், நேற்று காலை தடுப்புசுவரின் ஒரு பகுதி முழுவதும் இடிந்து விழுந்தது.
மக்கள் கூறுகையில், 'தடுப்பு சுவர் அமைக்கும் பணியில் உரிய முறையில் சிமென்ட் கலக்காமல் கற்களை கொண்டு தரம் இல்லாமல் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் நடந்த போதே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இடிந்து விழுந்தது. யாருக்கும் தெரியாமல் உடனடியாக பெயரளவிற்கு சீரமைத்தனர்.
தற்போது அதிகாலை நேரத்தில் இடிந்து விழுந்துள்ளது. பகல் நேரத்தில் இடிந்து விழுந்து இருந்தால், அருகில் புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். தரம் இல்லாமல் பணி மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களுக்கு, கமிஷனுக்காக பணிகளை வழங்குகின்றனர்.
எனவே, நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து இந்த பணிகளை போர்கால அடிப்படையில் மேற்கொள்வதுடன் தரமான முறையில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.