/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மெட்ராஸ் ரெஜிமென்ட் சார்பில் தேசிய சாகச பயிற்சி முகாம் துவக்கம் மெட்ராஸ் ரெஜிமென்ட் சார்பில் தேசிய சாகச பயிற்சி முகாம் துவக்கம்
மெட்ராஸ் ரெஜிமென்ட் சார்பில் தேசிய சாகச பயிற்சி முகாம் துவக்கம்
மெட்ராஸ் ரெஜிமென்ட் சார்பில் தேசிய சாகச பயிற்சி முகாம் துவக்கம்
மெட்ராஸ் ரெஜிமென்ட் சார்பில் தேசிய சாகச பயிற்சி முகாம் துவக்கம்
ADDED : ஜூன் 04, 2024 12:22 AM

குன்னுார்;குன்னுார் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் சார்பில் குழந்தைகளுக்கான தேசிய அளவில் சாகச பயிற்சி முகாம் துவங்கியது.
குன்னுார் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் சார்பில் நாடு முழுவதும் உள்ள குழந்தைகளுக்கான, 10 நாட்கள் சிறப்பு சாகச பயிற்சி முகாம் துவங்கியது. வெலிங்டன் ராணுவ பயிற்சி மைய கமாண்டன்ட் சுனில் குமார் யாதவ் துவக்கி வைத்தார்.
முகாமில், 'பாறை ஏறுதல், குதிரை சவாரி, ஏர் ரைபிள், பிஸ்டல் ஷூட்டிங் டிரக்கிங், படகு சவாரி, குழு கட்டும் பயிற்சி கேம்ப் பயர்,' உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரம் நடும் இயக்கம் நடத்தப்பட உள்ளது.
மேலும், நாய்கள் உட்பட வளர்ப்பு பிராணிகளை கையாளுதல் ; காயம் அடைந்த விலங்குகளை பராமரிப்பது விலங்குகள் மீதான கொடுமையை தடுப்பதற்கான சமூகத்துடன் தொடர்பு கொள்வது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. முகாமின் போது தேயிலை தொழிற்சாலை, சாக்லேட் தொழிற்சாலைகளுக்கு மாணவ, மாணவியர் அனைத்து செல்லப்பட உள்ளனர்.
ராணுவ அதிகாரிகள் கூறுகையில்,'குழந்தைகளுக்கு சாகச மனப்பான்மை, குழு பணி மற்றும் சமூக விழிப்புணர்வின் அடிப்படையில் சிறந்த மனிதர்களாகவும் பொறுப்புள்ள குடிமகனாகவும் உருவாக்க இந்த சாகச பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது,' என்றனர்.