/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ 'ஹாய்' சொன்னால் 'பாய்' சொல்லுங்கள் மாணவியருக்கு போலீசார் 'அட்வைஸ்' 'ஹாய்' சொன்னால் 'பாய்' சொல்லுங்கள் மாணவியருக்கு போலீசார் 'அட்வைஸ்'
'ஹாய்' சொன்னால் 'பாய்' சொல்லுங்கள் மாணவியருக்கு போலீசார் 'அட்வைஸ்'
'ஹாய்' சொன்னால் 'பாய்' சொல்லுங்கள் மாணவியருக்கு போலீசார் 'அட்வைஸ்'
'ஹாய்' சொன்னால் 'பாய்' சொல்லுங்கள் மாணவியருக்கு போலீசார் 'அட்வைஸ்'
ADDED : ஜூலை 13, 2024 08:41 AM

குன்னுார், : 'இளசுகள் வந்து 'ஹாய்' சொன்னால் 'பாய்' சொல்லி செல்ல வேண்டும்,' என, மாணவியருக்கு போலீசார் 'அட்வைஸ்' செய்தனர்.
குன்னுார் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை சிஸ்டர் மார்கிரெட் தலைமை வகித்தார்.
குன்னுார் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அனந்தநாயகி கலந்து கொண்டு பேசியதாவது:
பள்ளிக்கு வரும் மாணவிகள் படிப்பு மற்றும் விளையாட்டுக்களை மட்டுமே முக்கிய குறிக்கோளாக கொள்ள வேண்டும். பள்ளி முடித்து குழுவாக செல்லும் போது, சில இளசுகள் தங்களிடம் வந்து 'ஹாய்' என அழைத்தால் 'பாய்' என்று சொல்லி எஸ்கேப் ஆகிவிட வேண்டும். மீண்டும் பேச வந்தால் பேசக்கூடாது. போதை பொருட்களால் இளம் தலைமுறையினர் தங்களது வாழ்க்கையை தொலைத்து விடுகின்றனர். இதனை தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், இதனை பயன்படுத்தும் நபர்கள் குறித்து தகவல் தெரிவிக்க தயக்கம் காட்ட கூடாது. 19 வயதுக்குள் திருமணம் செய்தால் போக்சோ சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவர்.
இவ்வாறு அனந்தநாயகி பேசினார். சிறப்பு எஸ்.ஐ., ராஜம்மாள், காவலர்கள் நித்யா, ஷீபா ஆகியோர், குழந்தைகள் திருமணம், பாலியல் தொல்லை, போக்சோ பாதுகாப்பு சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.