/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ சிகப்பு கீரை சாப்பிட்டால் விலை கிடைக்கும் சிகப்பு கீரை சாப்பிட்டால் விலை கிடைக்கும்
சிகப்பு கீரை சாப்பிட்டால் விலை கிடைக்கும்
சிகப்பு கீரை சாப்பிட்டால் விலை கிடைக்கும்
சிகப்பு கீரை சாப்பிட்டால் விலை கிடைக்கும்
ADDED : ஜூன் 20, 2024 04:51 AM

மேட்டுப்பாளையம், : சிகப்பு கீரையை, அனைத்து மக்களும் விரும்பி சாப்பிட்டால், விலை உயர்வு கிடைக்கும் என விவசாயிகள் கூறினர்.
மேட்டுப்பாளையம் அருகே, மொங்கம்பாளையம், பாச்சானூர், தேரம்பாளையம், குமரன் குன்று சுற்றுப்பகுதிகளில், விவசாயிகள் சிகப்பு கீரை விவசாயம் செய்து வருகின்றனர். இந்த கீரையை தமிழக மக்கள் விரும்பி வாங்குவதில்லை. அதனால் கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது.
இதுகுறித்து தேரம்பாளையம் விவசாயிகள் கூறியதாவது: சிகப்பு கீரை விதைகளை விதைத்த, ஒரு மாதத்தில், கீரை அறுவடை செய்யலாம். ஒரு முறை விதைத்தால் நான்கு முறை அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கருக்கு ஒரு டன் வரை கீரை கிடைக்கும். இந்த கீரையை தமிழக மக்கள் வாங்குவதில்லை. ஆனால் கேரள மக்கள் விரும்பி வாங்குவதால், அனைத்து கீரைகளும் கேரளாவுக்கு அனுப்புகிறோம்.
பச்சை நிறத்தில் இருக்கும் அரக்கீரை, சிறுகீரை, பருப்பு கீரை, சுக்குட்டி கீரை, வெந்தயக்கீரை ஆகிய கீரைகளை, தமிழக மக்கள் அதிக அளவில் விரும்பி வாங்குகின்றனர். அதனால் ஒரு கீரை கட்டின் விலை, பத்திலிருந்து, 30 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. ஆனால் சிகப்பு நிறத்தில் இருக்கும் சிகப்பு கீரையை, மக்கள் அதிகம் வாங்குவதில்லை. அதனால் ஒரு கட்டு கீரை ஐந்து ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். கீரை விவசாயத்தால் லாபம் இல்லை. இருந்த போதும் குறைவான தண்ணீரில் ஒரு மாதத்தில் அறுவடை செய்வதாலும், வீட்டின் பணத் தேவைகளுக்கு இந்த சிகப்பு கீரை விவசாயம் கை கொடுக்கிறது. அதனால் இந்த கீரையை விவசாயம் செய்து வருகிறோம். அனைத்து தரப்பு மக்களும் இந்த கீரையை விரும்பி சாப்பிட்டால், சிகப்பு கீரைக்கும் விலை உயர்வு கிடைக்கும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.