/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மழை அதிகரித்தால் கேரட், உருளைக்கிழங்கில்... அழுகல் நோய் அபாயம்!மலை மாவட்ட விவசாயிகளுக்கு அறிவுரை மழை அதிகரித்தால் கேரட், உருளைக்கிழங்கில்... அழுகல் நோய் அபாயம்!மலை மாவட்ட விவசாயிகளுக்கு அறிவுரை
மழை அதிகரித்தால் கேரட், உருளைக்கிழங்கில்... அழுகல் நோய் அபாயம்!மலை மாவட்ட விவசாயிகளுக்கு அறிவுரை
மழை அதிகரித்தால் கேரட், உருளைக்கிழங்கில்... அழுகல் நோய் அபாயம்!மலை மாவட்ட விவசாயிகளுக்கு அறிவுரை
மழை அதிகரித்தால் கேரட், உருளைக்கிழங்கில்... அழுகல் நோய் அபாயம்!மலை மாவட்ட விவசாயிகளுக்கு அறிவுரை
மழை அதிகரிக்க வாய்ப்பு
நடப்பாண்டு தென்மேற்கு பருவ மழை காலதாமதமானாலும் நீலகிரியில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், காற்றில் ஈரப்பதம் அதிகரித்து, மாவட்டத்தில் அதிகப்படியாக பயிரிடக்கூடிய கேரட், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், வாழை போன்ற பயிர்களில் பூஞ்சாண வளர்ச்சி மற்றும் பயிர்களில் அழுகல் நோய் அதிகப்படியாக பரவ வாய்ப்புள்ளது.
தொழு உரமிட வேண்டும்
பல்லாண்டு பயிர்களான மா, பலா, கொய்யா, எலுமிச்சை, கிராம்பு, ஜாதிக்காயில் காய்ந்த கிளைகளை அகற்றிடவும், மரங்களின் எடையை குறைக்கும் வகையில் கிளைகளை கவாத்து செய்யவும், மரத்தின் அடிப்பகுதியில் மண்ணை குவித்து வைக்கவும், தோட்டத்தில் தேவையான வடிகால் வசதி ஏற்படுத்தி, நோய்த்தடுப்பு மருந்துகள் வேர்பகுதியில் நனையும்படி தெளிக்க வேண்டும்.
வாழை தார்களை மூடவேண்டும்
முக்கிய பயிரான வாழையில் காற்றினால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில், மரத்தின் அடியில் மண்ணால் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். சவுக்கு அல்லது கற்பூர மர கம்புகளை ஊன்றுகோலாக பயன்படுத்தி முட்டுக்கொடுக்க வேண்டும். மரங்களை சுற்றிலும் சுத்தப்படுத்தி நல்ல வடிகால் வசதி அமைக்க வேண்டும். மேலும், வாழை தார்களை முறையாக மூடிவைத்து, 75 சதவீதத்திற்கு மேல் முதிர்ந்த தார்களை அறுவடை செய்தல் வேண்டும். பசுமை குடில்களை பொறுத்தவரை பசுமைக்குடிலின் அடிப்பாகத்தை பலமாக நிலத்துடன் இணைப்பு கம்பிகளால் இணைக்க வேண்டும். இதில், ஏதாவது சந்தேகம் இருந்தால் ஊட்டியில் உள்ள தோட்டக்கலை துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.