Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ இடுஹட்டி ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழா

இடுஹட்டி ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழா

இடுஹட்டி ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழா

இடுஹட்டி ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழா

ADDED : மார் 11, 2025 10:42 PM


Google News
கோத்தகிரி; கோத்தகிரி இடுஹட்டி அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழா நேற்று முன்தினம் சிறப்பாக நடந்தது.

அன்று காலை, 10:00 மணிக்கு, அம்மன் ஆபரணங்கள் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. 10:30 மணிக்கு, அம்மனுக்கு அபிஷேகம் சிறப்பு பூஜை நடந்தது. பகல், 12:30 மணிக்கு, அம்மனை அலங்கரித்தல் நிகழ்ச்சியுடன், 1:30 மணிக்கு, பூ குண்டத்திற்கு மரம் கொண்டு வரும் நிகழ்ச்சியை அடுத்து, ஆராதனை பூஜை நடந்தது.

மாலை, 3:00 மணிக்கு முடி காணிக்கை நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. தொடர்ந்து, மாலை, 4:00 மணி முதல், 6:00 மணிவரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு, 8:30 மணிக்கு, அம்மன் புலி வாகனத்தில் பவனி வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு, 10:00 மணிக்கு, நாடகம் இடம் பெற்றது.

நேற்று காலை, 6:00 மணிக்கு கன்னியர் பூ குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, காலை, 10:00 மணிக்கு,அம்மனின் திருவீதி உலா மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. 3:30 மணிக்கு ஆடல் பாடல் நிகழ்ச்சி, 4:30 மணிக்கு, விழா நிறைவு பெற்றது. விழா ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us