ADDED : ஜூலை 07, 2024 01:27 AM
கூடலூர்:நீலகிரி மாவட்டம் கூடலூர், தேவர் சோலை மச்சிக்கொல்லி பேபி நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 47, மனைவி குஞ்சு, 40, ரவிச்சந்திரன், ஒரு மாதத்திற்கு முன், கூலி வேலைக்காக கர்நாடகா சென்றார்.
இரு தினங்களுக்கு முன் வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டில் மனைவி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
நீண்ட நேரத்துக்கு பின், மனைவி வீட்டுக்கு வந்தார். இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த ரவிச்சந்திரன், மரக்கட்டையால் மனைவியை தாக்கியுள்ளார். பலத்த காயம் அடைந்த மனைவி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். குடி போதையில் இருந்த, ரவிச்சந்திரன், மனைவி இறந்தது தெரியாமல் வீட்டில் உறங்கியுள்ளார். நேற்று முன்தினம், காலை மனைவி இறந்தது தெரியவந்தது. தேவர்சோலை போலீசார் வழக்கு பதிவு செய்து, ரவிச்சந்திரனை கைது செய்தனர்.