/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பயிர் செழிக்க உதவும் 'பஞ்சகவ்யா' தயாரிப்பது எப்படி? விவசாயிகள் விளக்கம் பயிர் செழிக்க உதவும் 'பஞ்சகவ்யா' தயாரிப்பது எப்படி? விவசாயிகள் விளக்கம்
பயிர் செழிக்க உதவும் 'பஞ்சகவ்யா' தயாரிப்பது எப்படி? விவசாயிகள் விளக்கம்
பயிர் செழிக்க உதவும் 'பஞ்சகவ்யா' தயாரிப்பது எப்படி? விவசாயிகள் விளக்கம்
பயிர் செழிக்க உதவும் 'பஞ்சகவ்யா' தயாரிப்பது எப்படி? விவசாயிகள் விளக்கம்
ADDED : ஜூன் 13, 2024 11:27 PM
பெ.நா.பாளையம் : பயிர்களுக்கு நல்ல வளர்ச்சி தரும், 'பஞ்சகவ்யா' தயாரிப்பது குறித்து, முன்னோடி விவசாயிகள் ஆலோசனை வழங்கி உள்ளனர்.
பஞ்சகவ்யா தயாரிக்க ஒன்பது வகையான பொருட்கள் தேவை. நாட்டு மாடு அல்லது கலப்பின மாடு தரும் சிறுநீர், சாணம் ஆகியவற்றை கொண்டு பஞ்சகவ்யா தயார் செய்யலாம். சாணம், 3 கிலோ கோமியம், 3 லிட்டர், பால், 2 லிட்டர், தயிர், 2 லிட்டர், நாட்டு சக்கரை ஒரு கிலோ, 12 வாழைப்பழங்கள், இளநீர் இரண்டு லிட்டர், 100 கிராம் ஈஸ்ட், கடலை புண்ணாக்கு ஒரு கிலோ சேகரித்துக் கொள்ள வேண்டும்.
பஞ்சகவ்யா தயாரிப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பாக புண்ணாக்கை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தண்ணீரில் ஊற வைத்த புண்ணாக்கு, பால், தயிர் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் ஒரு மண்பானை அல்லது பிளாஸ்டிக் குடத்தில் போட்டு மேல்புறத்தில் துணியை கொண்டு கட்டி விட வேண்டும். தினமும் காலை, மாலை ஒரு புறமாக குச்சியை கொண்டு கலக்க வேண்டும். ஏழு நாட்களுக்குப் பிறகு, 25 முதல், 30 லிட்டர் பஞ்சகவ்யா தயார். 10 லிட்டர் தண்ணீருக்கு, 300 மில்லி பஞ்சகவ்யா என கலந்து பயிர்களுக்கு தெளிக்கலாம். இது பயிர்களுக்கான நல்ல வளர்ச்சி ஊக்கி எனலாம். ஒருமுறை தயார் செய்யப்பட்ட பஞ்சகவ்யா ஆறு மாதங்கள் வரை வைத்து பயன்படுத்தலாம். விதை நேர்த்தி செய்யவும், பஞ்சகவ்யாவை பயன்படுத்தலாம் என, முன்னோடி விவசாயிகள் அறிவுரை கூறினர்.