ADDED : ஜூன் 24, 2024 12:07 AM

மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஆகிய இடங்களில், ஹிந்து முன்னணி சார்பில், கொடியேற்று விழாக்கள் நடைபெற்றன.
மேட்டுப்பாளையத்தில், ஹிந்து முன்னணி சார்பில், சத்ரபதி சிவாஜி பிறந்த தின விழா ஹிந்து சாம்ராஜ்ய தின விழாவாக கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு ஹிந்து முன்னணி சார்பில், நகரில் பல்வேறு இடங்களில் கொடியேற்று விழாக்கள் நடந்தன.
மேட்டுப்பாளையம் நகரில் சிறுமுகை சாலை பழைய சந்தை கடை பகுதியில், கொடி ஏற்று விழா நடந்தது. விழாவுக்கு, ஹிந்து முன்னணி கோவை மாவட்ட பொது செயலாளர் சதீஷ்குமார் தலைமை வகித்து, கொடியேற்றி வைத்தார். மாநில பேச்சாளர் மனோகரன் பெயர் பலகையை திறந்து வைத்தார். நகரத் தலைவர் காளியப்பன், துணைத் தலைவர் கார்த்திகேயன், பொது செயலாளர் பிரகாஷ், இளைஞர் அணி பொறுப்பாளர் ஹரிஹரன் மற்றும் நகர நிர்வாகிகள், ஹிந்து முன்னணியினர் பங்கேற்றனர். இதேபோன்று மேட்டுப்பாளையம் நகரிலும், காரமடை நகரம், ஒன்றியத்திலும், சிறுமுகை நகரிலும், ஹிந்து முன்னணி சார்பில் ஹிந்து சாம்ராஜ்ய தின விழாநடைபெற்றது.