/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ குன்னுாரில் பலத்த காற்றுடன் மழை; வீட்டின் கூரை பறந்ததால் பாதிப்பு குன்னுாரில் பலத்த காற்றுடன் மழை; வீட்டின் கூரை பறந்ததால் பாதிப்பு
குன்னுாரில் பலத்த காற்றுடன் மழை; வீட்டின் கூரை பறந்ததால் பாதிப்பு
குன்னுாரில் பலத்த காற்றுடன் மழை; வீட்டின் கூரை பறந்ததால் பாதிப்பு
குன்னுாரில் பலத்த காற்றுடன் மழை; வீட்டின் கூரை பறந்ததால் பாதிப்பு
ADDED : மார் 12, 2025 10:28 PM

குன்னுார்; குன்னுாரில் காற்றுடன் பெய்த மழையில், ரன்னிமேடு பகுதியில் வீட்டின் கூரை பறந்தது.
குன்னுாரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக காலையில் பலத்த காற்று வீசியதுடன், அவ்வப்போது மழையும் பெய்தது.
நேற்று முன்தினம் மாலையில் இருந்து பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. அதில், குன்னுார் ரன்னிமேடு அருகே செல்வி, ராஜேந்திரன் தம்பதியினரின் வீட்டின் கூரை பறந்தது.
இருவரும் அருகில் இருந்த சந்திரன் என்பவரின் வீட்டில் தஞ்சமடைந்தனர். நேற்று, தற்காலிகமாக வீட்டின் மேற்பகுதியில் பிளாஸ்டிக், மூடி வைத்து, தடுப்பு பணிகளை மேற்கொண்டனர்.
தகவலின் பேரில், நேற்று வருவாய் துறையினர் ஆய்வு மேற்கொண்டு நிவாரண தொகையாக, 8,100 ரூபாய் வழங்க ஏற்பாடு செய்தனர். தற்காலிகமாக வீட்டின் மேற்பகுதியில் பிளாஸ்டிக் மூடி தடுப்பு பணிகளை மேற்கொண்டனர்.