/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/மலைப்பாதையில் கடும் மேக மூட்டம்: கவனமுடன் செல்ல அறிவுரைமலைப்பாதையில் கடும் மேக மூட்டம்: கவனமுடன் செல்ல அறிவுரை
மலைப்பாதையில் கடும் மேக மூட்டம்: கவனமுடன் செல்ல அறிவுரை
மலைப்பாதையில் கடும் மேக மூட்டம்: கவனமுடன் செல்ல அறிவுரை
மலைப்பாதையில் கடும் மேக மூட்டம்: கவனமுடன் செல்ல அறிவுரை
ADDED : ஜூலை 29, 2024 02:39 AM

ஊட்டி;ஊட்டி மலைப்பாதையில் நிலவும் கடும் மேக மூட்டத்தால் வாகனங்களை இயக்க வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர்.
ஊட்டியில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக பரவலாக பெய்து வந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக மழை சற்று ஓய்ந்துள்ளது. மழையால் காலநிலையில் மாற்றும் ஏற்பட்டு கடும் குளிர் நிலவுகிறது. பகல் நேரங்களில் கடும் மேகமூட்டம் தென்படுகிறது.
குறிப்பாக, மலை பாதையில் ஏற்பட்டுள்ள மேக மூட்டத்தால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. முகப்பு விளக்குகளை எரியவிட்டு வாகனங்களை இயக்கி வருகின்றனர். கடும் குளிரால் சுற்றுலா தலங்கள் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. போலீசார் கூறுகையில், 'மலை பாதையில் பயணிக்கும் சுற்றுலா வாகனங்களை போலீசார் கவனமுடன் இயக்க வேண்டும்,' என்றனர்.