/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமங்களில் குறை தீர்க்கும் முகாம் பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமங்களில் குறை தீர்க்கும் முகாம்
பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமங்களில் குறை தீர்க்கும் முகாம்
பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமங்களில் குறை தீர்க்கும் முகாம்
பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமங்களில் குறை தீர்க்கும் முகாம்
ADDED : ஜூலை 08, 2024 12:21 AM
ஊட்டி;நீலகிரி மாவட்டத்தில் எல்லையோர கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களின் குறைத்தீர்க்கும் கூட்ட முகாம், காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடந்தது.
மாவட்ட எஸ்.பி., சுந்தர் வடிவேல் உத்தரவின் பேரில், மஞ்சூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, கிண்ணக்கொரை, காமராஜர்நகர், ஜே.ஜே.நகர், மசினகுடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிறியூர், இந்திரா காலனி ஆகிய பகுதிகளில் முகாம்கள் நடத்தப்பட்டன.
இதே போல, கோத்தகிரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, செம்மனாரை, தாளமுக்கு, மேல் கூப்பு, கீழ் கூப்பு; கொலக்கம்பை காவல் நிலையத்திற்கு உட்பட்ட, யானை பள்ளம், பழனியப்பா எஸ்டேட், மூப்பர்காடு, நெடுகல்பம்பை, பகுதிகளிலும் நடந்தது.
மேலும், நியூகோப் காவல்நிலையத்திற்கு உட்பட்ட, பாலவாடி, காமராஜர் நகர், குறிஞ்சி நகர், சேரம்பாடி காவல் எல்லைக்கு உட்பட்ட, முருக்கம்பாடி, வட்டகெல்லி மற்றும் அத்திசால் ஆகிய பழங்குடியினர் கிராமங்களில் முகாம்கள் நடந்தன. அதில், பழங்குடியின மக்களின் அனைத்து குறைகளும் கேட்டறிந்து, அவர்களிடம் இருந்து, 122 மனுக்கள் பெறப்பட்டன. முகாம்களில், 365 பழங்குடியின மக்கள் பங்கேற்று பயன் அடைந்தனர்.