/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ உழவர் சந்தையில் குப்பை மூட்டைகள்; வியாபாரிகள் எதிர்ப்பால் பரபரப்பு உழவர் சந்தையில் குப்பை மூட்டைகள்; வியாபாரிகள் எதிர்ப்பால் பரபரப்பு
உழவர் சந்தையில் குப்பை மூட்டைகள்; வியாபாரிகள் எதிர்ப்பால் பரபரப்பு
உழவர் சந்தையில் குப்பை மூட்டைகள்; வியாபாரிகள் எதிர்ப்பால் பரபரப்பு
உழவர் சந்தையில் குப்பை மூட்டைகள்; வியாபாரிகள் எதிர்ப்பால் பரபரப்பு
ADDED : ஆக 06, 2024 09:51 PM

கூடலுார் : கூடலுார் நகராட்சி வாகனங்களில் ஏற்றி வந்த குப்பை மூட்டைகளை உழவர் சந்தை வளாகத்தில் இறக்கி வைத்ததால், வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கூடலுார் நகராட்சி பகுதியில் அகற்றப்படும் குப்பைகள், நகராட்சிக்கு சொந்தமான கூட்ஸ் ஆட்டோக்களில் சேகரித்து, சில்வர்கிளவுட் பகுதியில் உள்ள குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்கின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் குப்பை ஏற்றி வந்த சில கூட்ஸ் ஆட்டோக்கள், கூடலுார் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள உழவர் சந்தை வளாகத்தில் நிறுத்தப்பட்டு, அதிலிருந்த குப்பை மூட்டைகள் இறக்கி வைக்கப்பட்டன.
இதனால், ஏற்பட்ட துர்நாற்றத்தால், உழவர் சந்தையில் காய்கறி விற்பனை செய்த வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தொடர்ந்து, ஊழியர்கள், குப்பை மூட்டைகளை மீண்டும் கூட்ஸ் ஆட்டோவில் ஏற்றி, எடுத்து சென்றனர். வியாபாரிகள் கூறுகையில், 'இது போன்ற செயல்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.