/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ அடிக்கடி திருட்டு; அதிகரிக்குமா போலீஸ் ரோந்து அடிக்கடி திருட்டு; அதிகரிக்குமா போலீஸ் ரோந்து
அடிக்கடி திருட்டு; அதிகரிக்குமா போலீஸ் ரோந்து
அடிக்கடி திருட்டு; அதிகரிக்குமா போலீஸ் ரோந்து
அடிக்கடி திருட்டு; அதிகரிக்குமா போலீஸ் ரோந்து
ADDED : ஜூன் 12, 2024 10:25 PM
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையத்தில் அடிக்கடி திருட்டு நடப்பதால் போலீஸ் ரோந்தை அதிகரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேட்டுப்பாளையம், காரமடை சாலையில் கோ -ஆப்ரேட்டிவ் காலனியில் வசிப்பவர் ராமதாஸ், 53 விவசாயி. இவர் இம்மாதம் ஒன்றாம் தேதி, உறவினர் வீட்டு விசேஷத்திற்காக, குடும்பத்தினர் அனைவரும், கோவைக்கு சென்று விட்டனர். இரண்டாம் தேதி வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த நெக்லஸ், வளையல், செயின், மோதிரம் என பத்து சவரன் தங்க நகைகள் திருட்டுப் போயிருந்தது தெரிய வந்தது. இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசில் ராமதாஸ் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதே பகுதியில் ஒரு வீட்டின் கதைவை உடைத்து, திருட முயற்சி செய்துள்ளனர். வீட்டில் பொருட்கள் ஏதும் இல்லாததால் திரும்பிச் சென்றுள்ளனர். அதே நாள் இடையர்பாளையத்தில் ஒரு வீட்டின் கதவை உடைத்து, உள்ளே இருந்த பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன் இடையர்பாளையம் சாலையில், செல்வபுரம் அரசு துவக்கப்பள்ளி எதிரே, அடுத்தடுத்து மூன்று வீடுகளின் கதவை திருடர்கள் உடைத்துள்ளனர். ஒரு வீட்டில் பத்தாயிரம் ரூபாய், வெள்ளி கொலுசு அரைஞான் கயிறு, தங்க கம்மல் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர்.
மேட்டுப்பாளையம் நகரில், கடந்த 10 நாட்களில், அடுத்தடுத்து ஆறு வீடுகளில் கதவை உடைத்து, திருடர்கள் நகைகள், பணம் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை. இந்த திருட்டு சம்பவங்கள், மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: மேட்டுப்பாளையம் நகரில் வீடுகள் அதிக அளவில் உள்ளன. அதனால் இரவில் போலீசாரின் ரோந்து பணிகளை அதிகப்படுத்த வேண்டும்.
முக்கிய வீதிகளில் மட்டும் போலீசார் ரோந்து செல்லாமல், குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதிகளுக்கும், போலீசார் ரோந்து வர, மாவட்ட காவல்துறை நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.