/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ நான்கு ஊராட்சிகளில்இலவச மண் பரிசோதனை நான்கு ஊராட்சிகளில்இலவச மண் பரிசோதனை
நான்கு ஊராட்சிகளில்இலவச மண் பரிசோதனை
நான்கு ஊராட்சிகளில்இலவச மண் பரிசோதனை
நான்கு ஊராட்சிகளில்இலவச மண் பரிசோதனை
ADDED : ஜூன் 20, 2024 04:58 AM
சூலூர் : சுல்தான்பேட்டை வட்டாரத்தில் நான்கு ஊராட்சிகளில், விவசாயிகளுக்கு இலவசமாக மண் பரிசோதனை செய்து தரும் பணி நடந்து வருகிறது.
இதுகுறித்து சுல்தான்பேட்டை வட்டார வேளாண் அதிகாரிகள் கூறியதாவது:
அதிக கார, அமில, உவர் நிலை இல்லாமல், நல்ல வடிகால் வசதியுடன் இருக்கும் மண்ணே வளமான மண்ணாகும். உயர் விளைச்சல் தரும் வீரிய ரகங்களை தொடர்ந்து சாகுபடி செய்வதால் மண்ணில் சத்துக்கள் குறைந்து விடும். ரசாயன உரங்களால் மண்ணின் தன்மை மாறி விடும். மண்ணில் உள்ள சத்துக்கள் குறித்து அறிந்து அதற்கேற்ப உரங்களை இடுவதால் மண் வளம் அதிகரிக்கும்.
அதற்காக, சுல்தான்பேட்டை வட்டாரத்தில், அப்பநாயக்கன்பட்டி, பச்சார்பாளையம், குமார பாளையம், செஞ்சேரிப்புத்தூர் ஆகிய நான்கு ஊராட்சிகளில், இலவசமாக மண் பரிசோதனை செய்து, அதன் முடிவுகளை ஐந்து நாட்களுக்குள் விவசாயிகளுக்கு வழங்கும் பணி துவங்கி உள்ளது.
மண் வள அட்டையும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக, விவசாயிகளின் விளை நிலங்களுக்கு சென்று, மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.