/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ வளர்ப்பு யானைகள் முகாமுக்குள் நுழையும் மக்னா தடுக்க வன ஊழியர்கள் நியமனம் வளர்ப்பு யானைகள் முகாமுக்குள் நுழையும் மக்னா தடுக்க வன ஊழியர்கள் நியமனம்
வளர்ப்பு யானைகள் முகாமுக்குள் நுழையும் மக்னா தடுக்க வன ஊழியர்கள் நியமனம்
வளர்ப்பு யானைகள் முகாமுக்குள் நுழையும் மக்னா தடுக்க வன ஊழியர்கள் நியமனம்
வளர்ப்பு யானைகள் முகாமுக்குள் நுழையும் மக்னா தடுக்க வன ஊழியர்கள் நியமனம்
ADDED : ஜூன் 12, 2024 01:18 AM

கூடலுார்;முதுமலை, தெப்பக்காடு யானைகள் முகாமில் வளர்ப்பு யானைகளுக்கு உணவு கொடுக்கும் போது, முகாமுக்குள் மக்னா யானை நுழைவது தடுக்க ஊழியர்கள் நியமித்துள்ளனர்.
முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு, அபயாரண்யம் யானைகள் முகாமில் மூன்று குட்டிகள் உட்பட, 30 வளர்ப்பு யானை பராமரித்து வருகின்றனர். இவைகளுக்கு காலை, மாலை வனத்துறை சார்பில் கொள்ளு, ராகி, கரும்பு உள்ளிட்ட உணவுகள் வழங்கி வருகின்றனர். இதனை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு ரசித்து செல்கின்றனர்.
இந்நிலையில், தெப்பக்காடு யானைகள் முகாம் ஒட்டிய, வனப்பகுதியில் உலாவரும் மக்னா யானை ஒன்று அவ்வப்போது முகாம் அருகே வந்து செல்கிறது.
சில தினங்களுக்கு முன், மாலை நேரத்தில் கரும்பு கழிவுகளை தேடி முகாமுக்குள் நுழைந்த, மக்னா யானை வன ஊழியர்களை அதிர்ச்சிக்குள்ளாகியது. சுதாரித்துக் கொண்ட வனத்துறையினர், அதனை வனப்பகுதிக்கு விரட்டினர்.
வனத்துறையினர் கூறுகையில், 'முகாமை ஒட்டிய வனப்பகுதியில் உலா வரும், மக்ன யானை, அவ்வப்போது வந்து செல்கிறது. காலை,மாலை நேரங்களில் வளர்ப்பு யானைகளுக்கு உணவு கொடுக்கும்போது, அவை முகாமுக்குள் வருவதை கண்காணித்து ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்,' என்றனர்.