/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்; அரசு பழங்குடியினர் பள்ளியில் ஆய்வு உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்; அரசு பழங்குடியினர் பள்ளியில் ஆய்வு
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்; அரசு பழங்குடியினர் பள்ளியில் ஆய்வு
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்; அரசு பழங்குடியினர் பள்ளியில் ஆய்வு
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்; அரசு பழங்குடியினர் பள்ளியில் ஆய்வு
ADDED : ஜூலை 25, 2024 09:55 PM
பந்தலுார் : பந்தலூர் தாலுகாவில், 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ், மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா, தேவாலா அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்தார்.
அங்கு மாணவ, மாணவிகளின் கற்றல் திறன், மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு மற்றும் சமையலறை உணவு பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்படும் இடம், கழிப்பறை வசதிகள் உள்ளிட்டவை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, 38 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள, அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளி கட்டடத்தை ஆய்வு செய்தார்.
உப்பட்டி கூடலுார் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில், 'டாடா டெக்னாலஜிஸ்' நிறுவனத்துடன் இணைந்து, 34.65 கோடி ரூபாய், மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தொழில், 4.0 தொழில்நுட்ப மையத்தில், மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பயிற்சிகளை நேரில் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக கிடங்கு, கால்நடை மருந்தகம் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டதுடன், உணவு பொருட்களின் இருப்பு மற்றும் இருப்பில் வைக்கப்பட்டுள்ள மருந்துகளையும் ஆய்வு செய்தார்.
இதில், கூடலுார் ஆர்.டி.ஓ., செந்தில்குமார், தாசில்தார்( பொ) கிருஷ்ணமூர்த்தி, பந்தலுார் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.