/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பெரும்பாலான பகுதிகளில் பெய்த கோடை மழை; விவசாயிகள் மகிழ்ச்சி பெரும்பாலான பகுதிகளில் பெய்த கோடை மழை; விவசாயிகள் மகிழ்ச்சி
பெரும்பாலான பகுதிகளில் பெய்த கோடை மழை; விவசாயிகள் மகிழ்ச்சி
பெரும்பாலான பகுதிகளில் பெய்த கோடை மழை; விவசாயிகள் மகிழ்ச்சி
பெரும்பாலான பகுதிகளில் பெய்த கோடை மழை; விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : மார் 12, 2025 10:23 PM

ஊட்டி; நீலகிரியில் நடப்பாண்டு துவக்கத்திலிருந்து உறைப்பனிக்கு இடையே, அவ்வப்போது நீர் பனியும் தென்பட்டதால் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டது.
கடந்த சில நாட்களாக வெப்ப சலனத்தால் கடும் வெயில் தென்பட்டது. கடும் வெயில் தென்பட்டு வந்ததால் தேயிலை தோட்டங்களில் சிவப்பு சிலந்தி தாக்கும் அபாயத்தால் பாதிக்கப்பட்டனர். மலை காய்கறி விவசாயிகள் முதல் போக விதைப்பு பணி மேற்கொண்ட நிலையில் மழையை எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர். சில இடங்களில் வருண பகவானை வேண்டி, சிறப்பு வழிபாடுகளும் நடந்தது.
நேற்று முன்தினம் மாலையிலிருந்து இரவு, 9:00 மணி வரை, ஊட்டி, கோத்தகிரி, மஞ்சூர், குன்னுார் உட்பட புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. நீரோடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தடுப்பணைகளில் நீர் வரத்து அதிகரித்தது.
மழையால் மலை காய்கறி, தேயிலை தோட்டங்களுக்கு ஏற்ற சீதோஷ்ண நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தேயிலை விவசாயிகள் தோட்டங்களை உரமிட்டு பராமரிக்க தயாராகியுள்ளனர். அதிகபட்ச மாக குந்தா, 5.8 செ.மீ., குன்னுார்., 5.5 செ.மீ., அப்பர் பவானி 4.5 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. பிற இடங்களில், 25 செ.மீ., முதல் 35 செ.மீ., வரை மழை பெய்துள்ளது.
நீலகிரியின் கோடை மழை சராசரி அளவு, 30 செ.மீ., ஆகும். நேற்றைய நிலவரப்படி, இது வரை, 8 செ.மீ., மழை பெய்துள்ளது. கோடை மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.