Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மூடப்பட்ட 'இன்கோ' தேயிலை தொழிற்சாலைகள் திறந்து செயல்படுத்த விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

மூடப்பட்ட 'இன்கோ' தேயிலை தொழிற்சாலைகள் திறந்து செயல்படுத்த விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

மூடப்பட்ட 'இன்கோ' தேயிலை தொழிற்சாலைகள் திறந்து செயல்படுத்த விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

மூடப்பட்ட 'இன்கோ' தேயிலை தொழிற்சாலைகள் திறந்து செயல்படுத்த விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

ADDED : மார் 11, 2025 10:42 PM


Google News
கோத்தகிரி; 'கோத்தகிரி மற்றும் கீழ் கோத்தகிரி பகுதியில், மூடப்பட்ட 'இன்கோ' தேயிலை தொழிற்சாலைகளை மீண்டும் திறக்க வேண்டும்,' என, விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கோத்தகிரியில் மலை மாவட்ட சிறு விவசாயிகள் நலச்சங்க கூட்டம் நடந்தது. சங்க தலைவர் தும்பூர் போஜன் தலைமை வகித்தார். துணை தலைவர்கள் ஆண்டி கவுடர், அருணா, போஜன் மற்றும் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தேயிலை துாளுக்கு குறைந்தபட்சம், 250 ரூபாய் ஏல விலை நிர்ணயம் செய்து, மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து தேயிலை துாள்களை ஏலம் மூலம் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும்.

நீலகிரி தேயிலைக்கு விலை கிடைக்க, கென்யா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் தேயிலை துாளுக்கு, 100 சதவீதம் வரி விதிக்க வேண்டும். விவசாயிகள் நலன் கருதி, கோத்தகிரி மற்றும் கீழ் கோத்தகிரி பகுதிகளில் மூடப்பட்ட 'இன்கோ' தேயிலை தொழிற்சாலைகளை மீண்டும் திறக்க வேண்டும். நஷ்டத்தில் இயங்கும் 'இன்கோ' தொழிற்சாலைகளை பாதுகாக்க ஏதுவாக, கூட்டுறவு நிர்வாகம் மற்றும் விவசாயிகளின் பங்கு, 51; 49 என்ற விகிதத்தை, விவசாயிகளுக்கான பங்கு 51; நிர்வாகத்தின் பங்கு 49,' என, மாற்றி விவசாயிகளிடம் பொறுப்பு ஒப்படைக்க வேண்டும்.

விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கேரட் விதை மெஷின், அறுவடை மெஷின், தேயிலை பறிக்கும் இயந்திரம் உள்ளிட்ட இயந்திரங்களை, 60 சதவீத மானியத்தில் வழங்குவதுடன், மாணவர்களின் கல்விக்கடன் மற்றும் பயிர் கடனை ரத்து செய்ய வேண்டும்.

இயற்கை விவசாயிகளுக்கு தேவையான நாட்டு ரக காய்கறி விதைகளை, 50 சதவீத மானியத்தில் வழங்குவதுடன், அங்கக வேளாண்மை சேவை மையம் துவக்கி, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு வழங்கி, இடுபொருள்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உட்பட, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் திரளாக பங்கேற்றனர்.

சங்க செயலாளர் கீதா குணாளன் நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us