மலை ரயில் பாதையில் விழுந்த மரங்கள்
மலை ரயில் பாதையில் விழுந்த மரங்கள்
மலை ரயில் பாதையில் விழுந்த மரங்கள்
ADDED : ஜூலை 22, 2024 10:54 PM

குன்னுார்;குன்னுார் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த காற்று வீசி வருகிறது.
அதில், குன்னுார்- ஊட்டி மலை ரயில் பாதையில், வெலிங்டன் அருவங்காடு லவ்டேல் உட்பட, 6 இடங்களில் மரங்கள் விழுந்தன.
இதனால், குன்னுார்- ஊட்டிக்கு காலை, 7: 45 மணிக்கும், ஊட்டியில் இருந்து குன்னுருக்கு காலை, 9:10 மணிக்கும் புறப்பட வேண்டிய மலை ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
ரயில் பாதையில் ரயில்வே பொதுப் பணித்துறை ஊழியர்கள் மரங்களை வெட்டி, பொக்லைன் உதவியுடன் அகற்றினர்.
அதே நேரத்தில், குன்னுார்- மேட்டுப்பாளையம் பாதையில் விழுந்த ஒரு மரம் உடனடியாக அகற்றப்பட்டதால், மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை, 7:10 மணிக்கு புறப்பட்ட மலை ரயில், குன்னுாருக்கு, 20 நிமிடங்கள் தாமதமாக வந்து சேர்ந்தது.
பிறகு ரயில் அருவங்காடு ரயில் நிலையத்தில் நீண்ட நேரம் நிறுத்தப்பட்டு, ஊட்டிக்கு ஒன்றரை மணி நேரம் தாமதமாக, மதியம், 1: 25 மணிக்கு சென்று சேர்ந்தது. சுற்றுலா பயணிகள் சோர்வடைந்தனர். தொடர்ந்து மற்ற ரயில்கள் பாதிப்பின்றி இயக்கப்பட்டது.